Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM
நடைப்பயிற்சி செய்வதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதுடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
தினந்தோறும் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் எடுத்து வைத்து நடந்தால், எடை குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள்தோறும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்தால் ஆண்டுக்கு 330 டாலர் மருத்துவ செலவை மிச்சப்படுத்தலாம் என்று அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
உலகில் நீண்ட தூரம் நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் கனடா நாட்டைச் சேர்ந்த ஜீன் பெலிவோ. இவர் 46,600 மைல் தூரம் நடந்து 64 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
குழந்தைகள் பொதுவாக 13 மாதங்களில் நடக்கத் தொடங்கும்.
அமெரிக்கர்கள் அதிகம் நடப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 5,117 அடிகளைத்தான் எடுத்து வைக்கிறார்களாம்.
வளர்ந்த நாடுகளில் அதிகம் நடப்பவர்களைக் கொண்ட நாடு ஆஸ்திரேலியா. அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் சராசரியாக 9, 695 அடிகளை எடுத்துவைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
1970-களில் உலகில் 66 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு நடந்து சென்றனர். ஆனால் இப்போது 13 சதவீதம் குழந்தைகள்தான் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.
மனிதர்கள் சராசரியாக மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மகாத்மா காந்தி, தினமும் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT