Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

பளிச் பத்து 23: ஒலிம்பிக் போட்டி

தொகுப்பு: பி.எம்.சுதிர்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, 1894-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரன் பைரே டி கியூபெர்டின் என்பவரால் தொடங்கப்பட்டது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் தொடங்கியது.

1900-ம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்கள் முதல்முறையாக கலந்துகொண்டனர். இதில் 22 பெண்கள் பங்கேற்றனர்.

ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற நாடு அமெரிக்கா. அந்நாடு இதுவரை 2,827 பதக்கங்களை வென்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வழங்கும் வழக்கம் 1904-ம் ஆண்டில் தொடங்கியது.

ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் வெள்ளியால் தயாரிக்கப்படுகிறது. இப்பதக்கத்தில் 6 கிராம் தங்கத்தில் முலாம் பூசப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடு மிக அதிகபட்சமாக 4 முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது.

முதலாவது மற்றும் 2-வது உலகப் போர் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

1900-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றிருந்தது.

பெர்லின் நகரில் 1936-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிதான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x