Published : 22 Jul 2021 02:59 PM
Last Updated : 22 Jul 2021 02:59 PM
# டோக்கியோ நகரம், முன்பு எடோ (Edo ) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் அந்நகரின் பெயர் டோக்கியோ என்று மாற்றப்பட்டது.
# 1868-ம் ஆண்டுமுதல், இந்நகரம் ஜப்பானின் தலைநகராக உள்ளது.
# உலகிலேயே அதிக மக்கள் வாழும் மெட்ரோபாலிட்டன் நகரமாக டோக்கியோ உள்ளது.
இங்கு 3.8 கோடி பேர் வசிக்கின்றனர்.
# வெளிநாட்டு மக்கள் இந்நகரில் வரியில்லாமல் பொருட்களை வாங்க முடியும்.
# வானிலை தெளிவாக உள்ள நாட்களில், டோக்கியோ நகரில் இருந்து பியூஜி மலையைப் பார்க்க முடியும்.
# அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதால், அவற்றைத் தாங்கும் வகையில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
# 2-ம் உலகப் போரின்போது 2 நாட்களில் நடந்த குண்டுவீச்சில் மட்டும் டோக்கியோவைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
# அமெரிக்காவில் உள்ளதைப் போன்று டோக்கியோ நகரிலும் டிஸ்னி லேண்ட் உள்ளது.
# டோக்கியோ நகரில் மொத்தம் 150 அருங்காட்சியகங்கள் உள்ளன.
# 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT