Last Updated : 21 Jul, 2021 03:14 AM

 

Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

பளிச் பத்து 21: சுனாமி

# கடற்பகுதியில் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்களால் சுனாமிகள் ஏற்படுகின்றன.

# சுனாமிகள் மணிக்கு 700 கிலோமீட்டர் வேகத்தில் கரையைத் தாக்கும்.

# சுனாமிகளின்போது கடல் மட்டம் 10 அடிகள் வரை உயரும்.

# இந்தியப் பெருங்கடலில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2.40 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

# 2004-ல் ஏற்பட்ட சுனாமி, 23 ஆயிரம் அணுகுண்டுகளின் ஆற்றலைக் கொண்டதாக இருந்தது.

# 80 சதவீதம் சுனாமிகள், பசுபிக் பெருங்கடல் பகுதியிலேயே ஏற்படுகின்றன.

# ஒரே பகுதியில் ஆண்டுக்கு 2 முறைகூட சுனாமி தாக்க வாய்ப்புகள் உள்ளன.

# பொதுவாக சுனாமியின் முதல் அலையால் அதிக பாதிப்பு ஏற்படாது. அடுத்தடுத்த அலைகளால்தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

# சுனாமி அலைகள் அதிக அளவில் தாக்கும் நாடாக ஜப்பான் உள்ளது.

# 1956-ம் ஆண்டு ஹவாய் தீவை தாக்கிய சுனாமியின்போது கடல் மட்டம் 50 அடிவரை உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x