Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநரான ஜேம்ஸ் ஹோபன் என்பவர் வெள்ளை மாளிகையை வடிவமைத்துள்ளார்.
கறுப்பின அமெரிக்கர்களை வைத்து வெள்ளை மாளிகையை கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையை கட்ட ஜார்ஜ் வாஷிங்டன் காரணமாக இருந்தாலும், அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஜான் ஆடம்ஸ்தான் இம்மாளிகையில் வசித்த முதல் அமெரிக்க அதிபர் ஆவார்.
வில்லியம் ஹென்ரி ஹாரிசன், சசாரி டெய்லர் ஆகிய அமெரிக்க அதிபர்கள் வெள்ளை மாளிகையில் வைத்து உயிரிழந்துள்ளனர்.
1933-ம் ஆண்டில், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வெள்ளை மாளிகையில் நீச்சல் குளம் கட்டப்பட்டது.
வெள்ளை மாளிகையில் தங்கும் அதிபர்களுக்கு மாதந்தோறும் உணவு, சலவை உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யப்படும் தொகை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
55 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தை பராமரிக்க ஆண்டொன்றுக்கு 1.6 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் மொத்தம் 132 அறைகளும், 135 கழிப்பறைகளும் உள்ளன.
இங்குள்ள டைனிங் ரூமில் ஒரே நேரத்தில் 140 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.
டென்னிஸ் கோர்ட், தோட்டம், நீச்சல் குளம், தியேட்டர், கூடைப்பந்து மைதானம், பில்லியர்ட்ஸ் அறை உள்ளிட்ட வசதிகளும் வெள்ளை மாளிகையில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT