Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1939-ம் ஆண்டில் நடந்த உலகக் கண்காட்சியில் முதல் முறையாக தொலைக்காட்சி ( டிவி) மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்தன. 1954-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமாகின.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் விளம்பரம் புலோவா என்ற கைக்கடிகாரத்தின் விளம்பரமாகும். 1941-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இது ஒளிபரப்பானது.
செனித் என்ற நிறுவனம் 1950-ம் ஆண்டில் முதன்முதலாக தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோலை உருவாக்கியது.
இந்தியாவில் தூர்தர்ஷன் சேனல் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முதலில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள 40 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது.
தூர்தர்ஷனில் 1976-ம் ஆண்டுமுதல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன.
1982-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாதான் இந்தியாவில் வண்ணத்தில் ஒளிபரப்பப்பட்ட முதல் நிகழ்ச்சியாகும்.
2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் மொத்தம் 197 மில்லியன் தொலைக்காட்சிகள் உள்ளன.
2020-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் 885 பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT