Published : 04 Jul 2021 05:57 AM
Last Updated : 04 Jul 2021 05:57 AM
கற்காலத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மரங்கள், யானைத் தந்தங்கள் போன்றவற்றால் ஆன ஸ்பூன்களை பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிற்காலத்தில் கிரேக்கம், ரோம நாடுகளில் ஸ்பூன்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
கிபி 1259-ம் ஆண்டில், இரண்டாம் இங்கிலாந்து மன்னரான முதலாம் எட்வர்ட், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ஸ்பூன்களைப் பயன்படுத்தினார்.
16-ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள், தாங்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் உணவு உண்பதற்கு வசதியாக ஸ்பூன்களையும் தங்களுடன் எடுத்து சென்றனர்.
ஸ்பூன்களைப் பரிசாக கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்தில் மேற்கத்திய நாடுகளில் இருந்துள்ளது.
உலகில் 50-க்கும் மேற்பட்ட வகையான ஸ்பூன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் அதிக விலை மதிப்புமிக்க ஸ்பூனாக 1490-ல் தயாரிக்கப்பட்ட அபோஸ்டல் ஸ்பூன் விளங்குகிறது. இந்த ஸ்பூன் 1993-ம் ஆண்டில் 55 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெஸ் வாரன் என்பவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய ஸ்பூன்களை சேகரித்து வைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஸ்பூன், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 2019-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 16.18 மீட்டர்.
நியூஜெர்ஸி நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் 5,400 அரிய ஸ்பூன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT