Last Updated : 11 Dec, 2015 03:22 PM

 

Published : 11 Dec 2015 03:22 PM
Last Updated : 11 Dec 2015 03:22 PM

மழை முகங்கள்: நிவாரண உதவிகளில் தீவிரம் காட்டும் உதவி இயக்குநர் அருண்மொழிப் பாண்டியன்

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடவாலம் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து உதவி இயக்குநராகப் பணியாற்றிக ்கொண்டிருப்பவர் அருண்மொழிப் பாண்டியன். தனது சொந்த ஊர் சுற்றுப்பகுதிகளில் சுற்றுச்சூழல், சித்த மருத்துவ முகாம், சுகாதாரக் கழிப்பறை கட்டிக்கொடுத்தல் போன்ற பணிகளில் இணைந்து செயலாற்றிய அனுபவம் உண்டு.

சென்னை வந்ததும் கனமழை வெள்ளத்தினால் பெருமளவில் ஏற்பட்ட பாதிப்படைத்த மக்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரைத் தூண்ட சேப்பாக்கம் 'தி இந்து' நிவாரண முகாமில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

''நான் ஒரு திரைப்பட இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். மழையினால் திரைப்பட பணிகள் தடைப்பட்டுள்ளன. இந்த வேளையில் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. வேறு எதிலும்கூட கவனம் செலுத்த விரும்பவில்லை. மழையின்போது பேப்பர் கூட கிடைக்கவில்லை. புதன்கிழமைதான் கிடைத்தது. அதில் தன்னார்வலர்கள் வேண்டும் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். இங்கே வந்து இவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறேன்.

முதல் இரண்டு நாட்கள் முகாமுக்கு வரும் பொருட்களை அடுக்கிவைக்கும் வேலைதான். கேபிஎன் டிரான்ஸ்போர்ட் வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை முதலில் கிடங்குகளில் கொண்டுபோய் வைக்கவேண்டும். பின்னர் அவற்றை எடுத்து தனித்தனியாகப் பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்டோம்.

எந்தெந்த இடங்களுக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என பட்டியல் தருவார்கள். அந்தப் பட்டியல்படி வியாசர்பாடி வேளச்சேரி, தி.நகர், பள்ளிக்கரணை பகுதிகளில் முக்கியமானவர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. மேலும் அவர்களுக்கு உதவியும் சரியான வகையில் போய் சேரவில்லை. இதனால் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள்.

அதனால் தங்களுக்கு உதவிசெய்ய முன்வருபவர்களிடமிருந்து உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்வதில்கூட அ வர்களிடம் நிதானமில்லை. இதனால் எங்களுக்கு முன்னதாக நிவாரணப் பொருட்களுடன் வந்த ராணுவ வண்டியும் திரும்பிசென்றுவிட்டது.

நாங்களும் எங்களுடன் அவர்கள் ஒத்துழைப்புத் தராததால் திரும்பிவரவேண்டியதாகிவிட்டது. இந்த நிமிடம் வரை அங்கு வெள்ளம் வடியவில்லை. அதன்பிறகு அங்குகொண்டுசென்ற நிவாரணப் பொருட்களை தி.நகர் வந்து கொடுத்தோம்" என்று கள நிலவரத்தைக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x