Published : 23 Dec 2015 08:16 AM
Last Updated : 23 Dec 2015 08:16 AM
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் சவுத்ரி சரண்சிங். இளமைக் காலங்களில் சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியில் ஈடுபட்டார்.
1952-ல் உத்தரப் பிரதேசத்தின் வருவாய்த் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஜமீன்தார் முறைக்கு முழுக்குப்போட்டார். நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினார். விவசாயிகளின் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குத் தன் எழுத்துகள் மூலமாகவும் கொண்டுவந்தார். அரசியல் சித்தாந்தத்தில் நேருவுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் 1967-ல் காங்கிரஸை விட்டு விலகி, பாரதிய லோக் தள் கட்சியை நிறுவினார். இரு முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவிவகித்தார்.
1977-ல் பிரதமர் பதவியிலிருந்து மொரார்ஜி தேசாய் விலக இந்தியாவின் ஐந்தாவது பிரதமரானார். சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த தினமான டிசம்பர் 23 தேசிய உழவர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment