Last Updated : 08 Jun, 2014 10:00 AM

 

Published : 08 Jun 2014 10:00 AM
Last Updated : 08 Jun 2014 10:00 AM

திரைத்திருடர்கள்

இன்றும் காணக் கிடைக்கும் காட்சிதான். என்றாலும் 30 வயதைக் கடந்தவர்களின் நினைவுகளில் மங்காமல் நிற்கும் காட்சி அது. நண்பகல் வேளையில் ஆளரவமற்ற தெருக்களின் சுவர்களில் மெளனமாக ஒரு உலகமே இயங்கிக்கொண்டிருக்கும். நடையைத் தளர்த்தி சற்று நின்று கவனித்தால், அந்தச் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுவரொட்டிகள் நமக்கு எத்தனையோ கதைகளைச் சொல்லும்.

படம் பார்த்திருந்தால் அது தொடர்பான அனுபவங்களைச் சுவரொட்டிகள் நினைவுபடுத்தும். அதேசமயம், பார்த்திராத படம் என்றால் சுவரொட்டி தரும் அனுபவம் அலாதி. படத்தின் நாயகன், நாயகி மற்றும் இன்ன பிற நடிகர்களின் தோற்றம் மற்றும் முகபாவனைகளை வைத்து நாமே ஒரு கதையை உருவாக்கிவிட முடியும். சிலசமயங்களில், படத்தின் உண்மையான கதையைவிட நம் கற்பனை அற்புதமாக அமைந்துவிடுவது உண்டு. சில அபூர்வமான திரைப்பட விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு இந்தப் பகுதியில் இடம்பெறும்.

நகரத்தில் திருடர்கள்

1967-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தின் சுவரொட்டி, காமிக்ஸ் கதைகளுக்கு இணையான உணர்வைத் தரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவாளராகத் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். இயக்குநராக மாறிய பின்னரும் தன் படங்களுக்குத் தானே ஒளிப்பதிவு செய்தார். மறைந்த கலைஞர் பாலுமகேந்திராவைப் போல!

இவர் இயக்கிய முக்கியமான திரைப்படங்கள் மாலையிட்ட மங்கை(1958), என்னைப் பார் (1961), வானம்பாடி (1963), தாயின் மேல் ஆணை (1966).

படங்கள் உதவி: கிங் விஸ்வா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x