Published : 17 Dec 2015 10:32 AM
Last Updated : 17 Dec 2015 10:32 AM
இங்கிலாந்தின் வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் (1778). தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் அப்பாவை இழந்தார். ஜேம்ஸ் வாட்டின் மகன் கிரிகோரி வாட், இவர்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார்.
l இளம் டேவிக்கு மிகப் பெரிய உறு துணையாக இருந்து வழிகாட்டினார். அறிவியலில் நாட்டம் கொண்டிருந்த இவர் டேவிஸ் கில்பர்ட் என்ற மருத்துவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
l இவரது அறிவுத் திறனாலும் பேச்சாற்றலாலும் ராயல் இன்ஸ்ட்டி டியூட்டில் வேலை கிடைத்தது. அறுவை சிகிச்சையின்போது வலியி னால் நோயாளிகள் அவதியுறுவதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினார். நைட்ரஸ் ஆக்சை டின் மயக்க விளைவைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். துணிச்ச லுடன் அந்த வாயுவை தானே நுகர்ந்து பார்த்தார். மயக்கமடைந்தார்.
l தொடர்ந்து பரிசோதித்து இதன் தன்மைகளை விளக்கிக் காட்டினார். லாஃபிங் கேஸ் எனப்படும் இந்த வாயுவைக் கண்டறிந்த டேவியின் புகழ் உலகெங்கும் பரவியது.
l 1756-ல் பிரிஸ்டலில் ஃபெனுமாடிக் அமைப்பில் இணைந்த டேவி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒரே வருடத்துக்குள் நைட்ரஸ் ஆக்சைடு குறித்த புகழ்பெற்ற கட்டுரைகளை வெளியிட்டார். இந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 1801-ல் ராயல் இன்ட்டிட்யூட்டில் உரையாற்றினார்.
l தோல் பதனிடல், வோல்டா மின்கலம் ஆகியவை குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வேதியியல் கூட்டுப் பொருள்களை மின்னாற் பகுப்பு மூலம் எவ்வாறு பிரிப்பது என்பதை இவர் விளக்கினார். சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டினார்.
l இந்த அடிப்படையில்,ஆல்கலைஸ்கள் உலோக ஆக்சைடுகளே என்பதை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். வாயுக்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அவை தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தன. குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் ஆகிய பல்வேறு தனிமங்களையும் கண்டறிந்தார்.
l ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியதால், ‘மின்சார ரசாயனத்தின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். ஐயோடின் பற்றி ஆய்வு செய்தார். வைரம் ஒரு கரிமப் படிவம் என்பதை நிரூபித்தார். 1815-ல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். இது ‘டேவிஸ் லாம்ப்’ என்று குறிப்பிடப்படுகிறது.
l சிதைந்த வேதியல் கூட்டுப் பொருட்களின் மீது எலக்ட்ராலிசிஸ் முறையில் செயல்பட்டு அதிலிருந்து பொட்டாசியம், சோடியம், பேரியம், கால்சியம், மக்னீஷியம் ஆகிய மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்தார். 1812-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது. தனது ஆராய்ச்சி கள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
l எலிமன்ட்ஸ் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசபி, எலிமன்ட்ஸ் ஆஃப் அக்ரி கல்சுரல் கெமிஸ்ட்ரி மற்றும் கான்சொலேஷன்ஸ் இன் டிராவல் உள்ளிட்ட இவரது நூல்கள் மிகவும் பிரசித்தம். ராயல் சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், ஏழு வருடங்கள் தொடர்ந்து இந்தப் பதவியில் பணியாற்றினார். பிறந்த நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய சர் ஹப்ம்ரி டேவி 1929-ம் ஆண்டு, 50-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT