Last Updated : 11 Dec, 2015 03:32 PM

 

Published : 11 Dec 2015 03:32 PM
Last Updated : 11 Dec 2015 03:32 PM

மழை முகங்கள்: மழை விடுமுறையில் நிவாரணப் பணிகள்... களத்தில் கலக்கும் கல்லூரி நண்பர்கள்!

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

முகாமுக்கு வரும் வாகனங்களிலிருந்து நிவாரணப் பொருட்களை இறக்குவதில் இளைஞர்கள் சிலர் ஈடுபாட்டோடு வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களில் மதிபாரதி என்பவரை அழைத்து அவரைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினோம். ஆனால் அவர்கள் ஆறுபேராம்.

மடிப்பாக்கம் உள்ளடங்கியப் பகுதிகளில்தான் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மற்றபடி இவர்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லை. அதனால் மற்றவர்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் நிவாரணப் பணிகளைப் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறார்கள்.

இதைப் பற்றி மதிபாரதி கூறும்போது, ''எங்கள் ஆறுபேருக்கும் ஒரு ஒற்றுமை. மடிப்பாக்கம் ஹோலி பிரின்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். பள்ளியிறுதிக்குப் பிறகு ஒவ்வொருவரும் பிரிந்துவிட்டோம்.

விவேகானந்தா ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கல்லூரியில் பி.காம் எடுத்துப் படிக்கும் நேசமணிகண்டனைத் தவிர, நான், (மதிபாரதி), ஹான்ட்சன், ஆகாஷ், மேகநாதன், விஷ்ணு அனைவருமே தற்போது பொறியியல் (பி.இ.) தேர்ந்தெடுத்துப் படித்துவருகிறோம்.

கனமழைக்குப் பிறகு கல்லூரிகள் விடுமுறை அறிவித்துவிட வீட்டில் சும்மாயிருக்கப் பிடிக்கவில்லை. என் தந்தை (மானா.பாஸ்கரன்) உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்தான் சும்மாயிருக்கவேண்டாம். நிவாரணப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறினார். அவரின் அன்பு உத்தரவுக்கிணங்க என்நண்பர்களைத் தொடர்பு கொண்டோம். அனைவரும் இன்முகத்தோடு உடனே இணைந்துகொண்டனர்.

மழைக்காக விட்ட கல்லூரி விடுமுறையில் மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வேலைசெய்கிறோம். நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதன்மூலம் ஒரு சமூகப் பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது என உணர்கிறோம்'' என்று அக்கறையோடு கூறும் அந்த நண்பர்களின் முகத்தில் விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்ட மகிழ்ச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x