Published : 02 Nov 2015 12:28 PM
Last Updated : 02 Nov 2015 12:28 PM
ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சமயம் அது.
யூதர்களின் ஆசைக்கு உறுதுணையாக நின்றது பிரிட்டன். அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. போரில் யூதர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு தனிநாடு அமைய உதவுவதில் தவறில்லை என்று நினைத்தது பிரிட்டன்.
அதன்படி, 1917 நவம்பர் 2-ல், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய்நாட்டை உருவாக்குவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார் பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர். 1922-ல் நடந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ மாநாட்டில், பால்போர் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
முதல் உலகப் போருக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் நாஜிப் படைகளால் பெரும் துன்பம் அனுபவித்த யூதர்கள் மீது சர்வதேசச் சமுதாயத்தின் இரக்கமும் அதிகரித்தது. 1948-ல் இஸ்ரேல் உருவானது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT