Published : 16 Nov 2015 03:13 PM
Last Updated : 16 Nov 2015 03:13 PM
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கருத்துச் சொல்லும் இணையவாசிகள், கொட்டித் தீர்க்கும் மழை குறித்தும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில், #மழையும்_நானும் மற்றும் #chennairains ஆகிய இரண்டு ஹேஷ்டேகுகளும் இந்திய அளவில் ட்ரெண்டாகின. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்வீட்களின் தொகுப்பு:
>#மழையும்_நானும்>#chennairains ஹேஷ்டேக் ட்வீட்கள்:
ஷா: அவன் ஓடி ஒளியுற ஆள் இல்லை, தேடி வந்து அடிக்கிற ஆளு
#மழை!!
ராஜலிங்கம்: குடை தெறிக்கும் வெள்ளம், மடை திறக்கும் தெப்பம்!
கோகிலா: அம்மா ஆட்சியில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம்..
மீனே, மீனவர்களைத் தேடி ஊருக்குள் வரும்!
ராஜ ராஜன்: சென்னை வெள்ளம் ரொம்ப மோசமா இருக்கு.., நீரோட்டம் அதிகமா இருக்கு.., நம்ம கவனமா செயல்படனும்!- பியர்கிரில்ஸ்
கோவை காதர்: பூமி குளிர வானம் அழுதது!
சப்பாணி: மழைக்காக காத்திருந்தோம் நானும், ஜெர்க்கினும்
ஆராதனா: நீ... நான்... மழை... பயணம்!
ஜமிலா: சிலரை ரசிக்க வைத்த மழை, பல விவசாயிகளின் கண்ணீரை, மழைத்துளி போல மண்ணில் விழ வைத்துவிட்டது!
பூங்குன்றன்: இங்க ஸ்டேட்டஸ் போடற முக்காவாசி பயலுக, மழை வந்தா எப்படா போகும்னு நினைக்குறவங்க, இங்க வந்து இளையராஜா, ஜன்னல் ஓரம்னு அடிச்சி விடறாங்க.
பட்டிக்காட்டான்: மழை எப்போ நிக்கும் ?
ஏன் மாப்ள வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?
இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னு ஸ்டேட்டஸ் போட போறேன்!
இனியவன்: ஆஹா இந்நேரம் சில பேரு போட்டோ எடுக்குறேனு கெளம்பி இருப்பாங்களே..
வள்ளி ம(கன்)ணிகண்டன்: விடுமுறை நாட்களில் என்னை வீட்டுச்சிறை வைத்த பக்கி நீ..! #மழை
புருஷோத்தமன்: ராமனை வழிபட்டு வந்த எங்களை ரமணனையும் வழிபட வைத்தாய்!
பாரதி: நீ இல்லாம என்னால வாழவே முடியாதுன்ற டயலாக்,
உனக்கு மட்டும்தான் பொருந்தும்!
ஓரம்போ: கிணத்த காணோம்ங்கற மாதிரி தமிழ்நாட்டின் தலைநகரத்த காணோம்!- 'மழைக்குள் சென்னை'
ராணா: பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் - ஜெயலலிதா
இனி பெட்ரோல் விலை கூடுனா என்ன, கொறஞ்சா என்ன, நாங்க நீச்சல் அடிச்சுதானே போகப்போறோம்?
வைகை: விருந்தும், மழையும் மூணு நாளைக்குத்தான் இருக்கணும்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT