Published : 11 Jun 2014 12:44 PM
Last Updated : 11 Jun 2014 12:44 PM
ஹாலிவுட்டில் வரும் எல்லா தொழில் நுட்பங்களையும் தமிழ் திரைப்படங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். 1965-ல் சீன் கானரி நடித்து வெளி யான ‘தண்டர்பால்’ படத்தில் வரும் தொழில்நுட்பத்தை லேட்டஸ்ட் தமிழ் படம் ஒன்றில் தற்போது பயன்படுத்தியிருக்கி றார்கள். இந்த வரிசையில், ‘மோஷன் டார்ச்சர்’ தொழில்நுட்பத்தில் இன்னொரு பிரம்மாண்டத் திரைப்படம் தயாராகத் தொடங்கியிருக்கிறது. அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை ஆகி யோர் நமக்காக பிரத்தியேக பேட்டி அளித்திருக்கிறார்கள். தொடர்கிறது பேட்டி...
இயக்குநர்: நடிகர், நடிகைகளின் உடல் அசைவை பதிவு செய்து கம்ப்யூட்டர் உதவியுடன் அதை 3டி படமாக்குவது மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம். அதைவிட நவீனமானது மோஷன் டார்ச்சர் தொழில்நுட்பம். மோஷன் கேப்ச்சர் படம்போல, நடிகர், நடிகை கள் ஸ்பாட்டுக்கு வரக்கூட தேவை யில்லை. அவங்க போட்டோ இருந்தா ஸ்கேன் பண்ணி, கம்ப்யூட்டர்ல போட்டுட்டா அதுவே நடிச்சிடும்.
தயாரிப்பாளர்: புண்ணியமாப் போகும். மொதல்ல அந்த டெக்னாலஜிய யூஸ் பண்ணுங்க.
நடிகை: ஆக்சுவல்லி.. திஸ் ஃபிலிம் என்க்கு ஃபர்ஸ்ட் ஃபிலிம். ஐ வெரி மச் கோஆபரேட்...
தயாரிப்பாளர் (கிசுகிசு குரலில்): அன்னக்கா அருக்காணிங்கிற பேரை நான் தான் ஹனிகா அர்கானின்னு மாத்தி வச்சேன். என்னமா பீட்டர் வுடுறா பாருங்க..
இயக்குநர்: வழக்கமான படங் கள்ல நடிகர், நடிகைகள் சம்பளத் துக்கு லட்சக்கணக்குல செல வாகும். மோஷன் டார்ச்சர் டெக்னால ஜிங்கிறதால அதெல்லாம் மிச்சம்.
தயாரிப்பாளர்: கேக்கவே சந்தோஷமா இருக்கு.. மேல மேல..
இயக்குநர்: ஆனா, டிஜிட்டலை சேஷன், ஆப்டிக்கல் சிஸ்டம், 3டி பொசிஷனிங், கேமரா கேலிப ரேஷன்..
தயாரிப்பாளர் (மனசுக்குள்): ஐயோ.. புரியாத வார்த்தைகளா சொல் றாரே.. பட்ஜெட்டு எங்கே போய் முடியப்போகுதோ..
இயக்குநர்: டைம் மாடுலேஷன்னு நிறைய வேலைகள் இருக்கு. இதுக் கெல்லாம் தயாரிப்பாளருக்குதான் நன்றி சொல்லணும். எவ்ளோ செல வானாலும் பரவாயில்லைன்னுட்டார்.
தயாரிப்பாளர் (மீண்டும் மனசுக்குள்): ஒரு பேச்சுக்கு சொன்னேன். அதையே புடிச்சுட்டு தொங்குறாங்களே.
இயக்குநர்: இறுக்கிப் புடிச்சு 100 கோடிக்குள்ள செலவை அடக்கிட லாம்னு பாக்குறோம்.
தயாரிப்பாளர்: அய்யய்யோ.. 100 கோடியா. இயக்குநர் சார்! உங்க ளுக்கு மோஷன் டார்ச்சர் டெக் னாலஜி எப்படி ஒர்க்அவுட் ஆகுதோ தெரியல. எனக்கு அல் ரெடி டார்ச்சர் ஆகிடிச்சு. பட்ஜெட் டைக் கேட்டதுலருந்து வயித்துக் குள்ள கடாபுடான்னு மெட்ரோ ரயில் ஓடுற சத்தம் கேக் குது. ஆள விடுங்க ஜூட்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT