Published : 18 Nov 2015 08:43 AM
Last Updated : 18 Nov 2015 08:43 AM
பிரிட்டனில் நரி, மான், முயல் போன்ற பாலூட்டிகளை வேட்டையாடுவதைத் தடை செய்யும் சட்டம், 2004 நவம்பர் 18-ல் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம் பொதுவாக, நரி வேட்டை தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதுவரை, வேட்டைநாய்கள் சகிதம் குதிரை ஏறி நரிகளை வேட்டையாடுவதைப் பொழுதுபோக்காவே கொண்டிருந்தனர் பிரிட்டிஷ் மக்கள் பலர். 2002-ல் ஸ்காட்லாந்தில் காடுகளில் வசிக்கும் பாலூட்டிகளை வேட்டையாடுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டனில் உள்ள விலங்கு நல ஆர்வலர்களும், இதுபோன்ற சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த டோனி பிளேர், இதற்கான முயற்சிகளை எடுத்தார். இதற்கு மக்கள் ஆதரவும் கிடைத்தது. பெரும்பான்மையானோர் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.
தடைச் சட்டத்துக்குப் பல தரப்பினரின் ஆதரவு கிடைத்தாலும், இளவரசர் சார்லஸுக்கு இதில் விருப்பமேயில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும், மக்கள் மனமே வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT