Published : 16 Oct 2015 10:34 AM
Last Updated : 16 Oct 2015 10:34 AM
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருக் கும் மணிமேகலை அதே சேனலில் வெள்ளிக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் ‘பிளாக்’ என்ற திகில் நிகழ்ச்சியிலும் நடிக்கிறார். நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என்று ஒரே நேரத்தில் 2 வேலைகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
“பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு விண்ணப்பிக் கும்போதே சன் மியூசிக் சேனலுக்கும் விண்ணப்பித் தேன். அங்கு சேர்ந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகி விட்டன. சிறுவயதிலேயே சீனியர் தொகுப்பாளினி யாகவும் ஆகிவிட்டேன். ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பதற்காகத்தான் ‘பிளாக்’ தொடரில் நடிக்கிறேன்” என்றவாறு பேசத் தொடங்கினார் மணிமேகலை.
‘பிளாக்’ தொடரில் அழுவது போன்று நடிக்கும் காட்சியில் நீங்கள் ஓவர் ஆக்டிங் செய்ததாக சிலர் கிண்டல் செய்தார்களாமே.. உண்மையா?
அது ஓவர் ஆக்டிங் எல்லாம் இல்லை. உண்மை யான பயத்தில் அழுதது. நடுநிசி 12 மணிக்கு இந்த ஷூட்டிங்கை நடத்துகிறோம். அதுவும் ஒரு குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட, 20 ஆண்டுகளாக யாருமே எட்டிப்பார்க்காத வீட்டில் படப்பிடிப்பு. பயம் இருக்கத்தானே செய்யும். ஒரு பூனை சுவரில் தாவினால்கூட மனதில் பயம் பிடித்துக் கொள்கிறது. கூடவே கேமராமேன் உள்ளிட்ட ஒரு குழு இருப்பதால் மனதை தேற்றிக்கொண்டு நடிக் கிறேன்.
அப்படி இருக்கும் போது பயமுறுத்தும்படி ஏதாவது நடந்தால் அழாமல் இருக்க முடி யுமா? இந்த தொடர் ஒரு வித்தியாசமான முயற்சி. சென்னை யில் மட்டுமில்லாமல் கொடைக்கானலிலும் திகில் பகுதி என்று நம்பப்படும் இடங்களுக்கு சென்று ஷூட் செய்கிறோம். பேய் பங்களாக்கள் என்று நம்பப்படும் இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்துகிறோம். மொத்தத்தில் இது பேய் களைத் தேடும் ஒரு பயணமாக இருக்கிறது. இது நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் அடுத்து கோவா உள் ளிட்ட இடங்களுக்கு செல்லும் திட்டமும் இருக்கிறது.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கிறீர்கள். இது போர் அடிக்கவில்லையா? வேறு எந்த புதிய விஷயத்தையும் செய்யவேண்டுமென்று தோன்றவில்லையா?
இது எனக்கு மிகவும் பிடித்த வேலை. அப்படி இருக்கும்போது எப்படி போர் அடிக்கும்? ஜாலியாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் அந்த ஜாலி ஒரு குறிப்பிட்ட எல்லையோடு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குத்தான் என் வீட்டிலும் அனுமதி கிடைக்கும். அதனால்தான் வெளியில் ஈவன்ட், திரைப்பட நிகழ்ச்சிகளில்கூட என்னைப் பார்க்க முடியாது. இப்போதைக்கு தொகுப்பாளினியாக இருப்பது பிடித்துப்போனதால் மீடியாவில் இருக்கும் மற்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்த தோன்றவில்லை.
உங்களுக்கு பிடித்த தொகுப்பாளர், தொகுப்பாளினி யார்?
நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ரொம்பவும் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இப்போது அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. அதனால் சின்னத்திரை ஒரு நல்ல தொகுப்பாளரை இழந்துவிட்டது என்றே சொல்வேன். அவரைப் போல் பெப்சி உமாவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது நிகழ்ச்சித் தொகுப்பில் அவரது பாதிப்பு உண்டு. அதேபோல ஜெர்ரியின் ஸ்டைலும் பிடிக்கும். இவர்கள் எல்லோரும் மறக்க முடியாதவர்கள். இவர்களைப் போல மேலும் பல தொகுப்பாளர்களை எனக்கு பிடிக்கும் அதையெல்லாம் சொன்னால் எழுத இடம் இருக்காது.
குஷ்பு, ரோஜா போன்ற சீனியர் நடிகைகள் தொகுப்பாளினியாக அவதாரம் எடுக் கிறார்களே?
பொதுவாக ஒரு சினிமா பிரபலம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங் கும்போது அதற்கு நிறைய வர வேற்பு கிடைக்கிறது. நிகழ்ச்சிக்கு வரும் சினிமா பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு பவருடன் சேர்ந்து நடித்திருக்க வாய்ப்பு உண்டு.
அப்படி இருக் கும்போது நிறைய சுவாரஸ்ய மான விஷயங்கள் வெளிப்படும். அவர்கள் ஒரு திரை நட்சத் திரத்தை எதிர்கொள்ளும் ஸ்டைலும் மிக இயல்பாக இருக்கும். அந்த வரிசையில் குஷ்பு மேடம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவர் தொகுப்பாளினியாக வந்து போகும் எந்த நிகழ்ச் சியையும் நான் பார்க் காமல் இருந்ததில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT