Last Updated : 19 Oct, 2015 08:36 AM

 

Published : 19 Oct 2015 08:36 AM
Last Updated : 19 Oct 2015 08:36 AM

இன்று அன்று | 19 அக்டோபர் 1910: ஒரே குடும்பத்துக்கு இரண்டு நோபல்!

அம்மா மொழிபெயர்ப்பாளர். அப்பா ரயில்வேயில் துணை ஆடிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தந்தை வழி உறவினரான சர் சி.வி.ராமன், இயற்பியலுக்கான நோபல் பரிசு வாங்கியவர். இத்தனைப் பெருமைகள் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் சந்திரசேகர். லாகூரில் 1910, அக்டோபர் 19-ல் பிறந்தார்.

தனது 18-வது வயதில், ‘தி காம்டன் ஸ்கேட்டரிங் அண்ட் தி நியூ ஸ்டாட்டிஸ்டிக்ஸ்’ எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இயற்பியலில் அவருக்கு இருந்த அபார அறிவு, பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பைத் தந்தது. நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளைக் குள்ளன்கள் (white dwarf) என்று அழைக்கப்படும் நட்சத்திரங்களைப் பற்றிய அப்போதைய அறிவியல் நம்பிக்கைகளைத் தவறு என்று கூறினார். சூரியனின் நிறையைப்போல் 1.4 மடங்கு அதிக நிறை கொண்ட நட்சத்திரங்கள், எரிபொருள் தீர்ந்ததும், நட்சத்திரங்கள் உட்பட அருகில் உள்ள பொருட்களை உள்ளிழுத்துக்கொள்ளும் என்றார்.

அப்போது அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், இதே கண்டுபிடிப்புக்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x