Published : 20 Oct 2015 11:03 AM
Last Updated : 20 Oct 2015 11:03 AM
‘‘போன வருஷம் மாதி ரியே இந்த வருஷ மும் அவசியம் கொலுவுக்கு வந்திடுங்க’’ - பக்கத்து வீட்டில் உள்ள உஷா - ராஜேஷ் தம்பதியை அழைத்தாள் மாலதி.
அவள் சென்றதும், ‘‘ஆமா, இவ கொலு வச்சிருக்கானு எல் லோரையும் கூப்பிட்டு, பலகாரம் கொடுத்து, தன் பகட்டையும் செல்வாக்கையும் காட்டணுமா?’’ என்றாள் உஷா.
‘‘அதுல என்ன தப்பு உஷா?’’ என்றான் ராஜேஷ்.
‘‘எல்லோரும் பட்டு சேலையும், நகையுமா வந்து ஆடம்பரத்த காட்ட இது தேவையாங்க?’’ என்றாள்.
அமைதியாகக் கேட்ட ராஜேஷ், ‘‘சரி சரி, வெறும் கையோட போகாம எதுனா பொம்மை வாங்கிப் போ’’ என்றான்.
அன்று நவராத்திரி தினம். மாலதியின் வீட்டுக்கு வேண்டா வெறுப்பாக சென்றிருந்தாள் உஷா. தான் வாங்கியிருந்த பொம்மையை கொலுப்படியில் வைத்தாள்.
முகமலர்ச்சியுடன்
வீடு திரும்பிய உஷாவிடம் ராஜேஷ், ‘‘போகும்போது எரிச்சலோட போன. இப்போ சந்தோஷமா வந்திருக்க?’’ என்றான்.
‘‘நான் வாங்கிக் கொடுத்த பொம்மை நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. மாலதியும், ‘இது உஷா வாங்கி கொடுத்தது’ன்னு பெருமையா சொன்னா’’ என்றாள் பூரிப்புடன்.
‘‘ஆமா. என்ன பொம்மை வாங்கிட்டுப் போன?’’ என்றான்.
‘‘காந்தி சொன்ன மூன்று குரங்குகள் பொம்மைங்க. இதை விட பெருசா, அழகான பொம்மை எல்லாம் இருந்துச்சு. ஆனா எல் லோருக்கும் நான் வாங்கிட்டுப் போன இந்த பொம்மைதான் பிடிச்சுது’’ என்றாள்.
‘‘பார்த்தியா, இதுதான் கொலுவோட மகத்துவம். மாலதி மேல வெறுப்பா இருந்த. நீ வாங்கிட்டுப் போன குரங்கு பொம்மை அந்த வெறுப்பை போக்கிடிச்சு. மனுஷங்களுக்குள்ள இருக்கிற வேறுபாடுகளை உயிர் இல்லாத இந்த பொம்மைங்கதான் நீக்குதுங்க. வருஷத்துக்கு ஒரு தடவ இந்த பொம்மைங்கள ஒண்ணா கூடவச்சு, அது மூலமா மனுஷங்க ஏழை, பணக்காரன், ஜாதி, மதம்னு வேறுபாடு பாக்காம சேர்ந்து வாழணும்னு சொல்றதுக்குதான் இந்த பண்டிகை. நீ சொன்ன மாதிரி ஆடம்பரம், பகட்டுக்காக இல்ல’’ என்றான்.
மனம் தெளிந்தாள் உஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT