Published : 28 Oct 2020 01:04 PM
Last Updated : 28 Oct 2020 01:04 PM

‘வேலையைப்பாருங்கள்’ என்ற தோனி ரசிகருக்கு பதிலடி கொடுத்த வர்ணனையாளர் சைமன் டூல்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் ஆதிக்கம் இந்தத் தொடரில் பொய்யாய் பழங்கதையாய் ஆனதையடுத்து ரசிகர்களில் ஒரு பகுதியினர், வர்ணனையாளர்கள் முன்னாள் வீரர்கள் என்று தோனியின் கேள்விக்குரிய சில முடிவுகள் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

தோனி ரசிகர்களுக்கு எப்போதும் அணி வெற்றி பெற்றால் கொண்டாடித் தீர்ப்பார்கள், தோனியை புகழ்ந்து பேசுவார்கள், தோற்றால் தோனியை விமர்சனம் செய்பவர்கள் மீது பாய்வார்கள். தோனியை விமர்சித்து விடக்கூடாது. சிஎஸ்கே அணி நிர்வாகமும் அணியை வளர்த்தெடுப்பதற்குப் பதில் தோனியின் ‘இமேஜ்’ என்பதை வழிபாட்டுக்குரிய ஒரு பிம்பமாக மாற்றியதையே செய்தது.

பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூட தோனி என்ன கூறுகிறாரோ அதையே கிளிப்பிள்ளை போல் திருப்பிக் கூறியதையே பார்த்தோம்.

ரெய்னா கோபமடைந்து வெளியேறிய போது அவரை எப்படியாவது தக்க வைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை. ரெய்னா இல்லாததே சென்னை தோல்விகளுக்குக் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் வர்ணனையாளரும் நியூஸி. அணியின் முன்னாள் வலது கை வேகப்பந்து வீச்சாளருமான சைமன் டூல், தோனியின் கேப்டன்சி பற்றியும் சில முடிவுகள் பற்றியும் விமர்சித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் சைமன்டூலுக்கு மெசேஜ் செய்த அந்த ரசிகர், ’டியர் சைமன், தோனி விமர்சிப்பதை நிறுத்துங்கள், உங்கள் வேலை என்னவோ அதைப் பாருங்கள், ஒரு மிகப்பெரிய வீரரை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் பெரிதாக ஆடிவிடவில்லை. மரியாதையுடன் இந்த மாதிரி பழக்கவழக்கங்களைக் கைவிடுங்கள்’ என்று சாடியிருந்தார்.

’உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்று அவர் கூறியதையடுத்து பிரதிக் ராதி என்ற அந்த நெட்டிசனுக்கு பதிலளித்த சைமன் டூல், “உண்மையில் மன்னிக்கவும் பிரதிக், ஆனால் ஒரு வர்ணனையாளரின் வேலை என்னவென்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் நான் ஒன்று கூறுகிறேன், அது ஆட்டம் பற்றிய வர்ணனை விமர்சனம், அதை ஆடுபவர்கள் பற்றிய கருத்து ஆகியவையும் ஆகும். ஹேவ் எ கிரேட் டே மேட்’ என்று பதிலடிகொடுத்தார்.

- நோபாலன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x