Last Updated : 16 Oct, 2015 11:06 AM

 

Published : 16 Oct 2015 11:06 AM
Last Updated : 16 Oct 2015 11:06 AM

இன்று அன்று | 16 அக்டோபர் 1951: பாகிஸ்தானின் முதல் பிரதமர்!

“என்னிடம் செல்வமோ, சொத்தோ கிடையாது. ஆனால், அவசியம் ஏற்பட்டால் நாட்டைக் காப்பாற்ற என் உயிரையும் தருவேன்” என அறிவித்தவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் லியாகத் அலிகான். முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாவின் அபிமானம் பெற்ற தலைவர் இவர். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, ஜின்னா முதல் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவிக்கு உசிதமானவர் என ஏகோபித்த வரவேற்போடு தேர்ந்தெடுக்கப்பட்டவர் லியாகத் அலிகான். அரசியல் கோட்பாடு, உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் எனப் பாகிஸ்தானின் அரசியல் உள்கட்டமைப்பை வடிவமைத்த அவரை பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் என்றே புகழ்கின்றனர்.

‘தேசத் தலைவர்’ என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டார். இந்தியா மீது போர் தொடுக்க மறுத்ததால் 1951 அக்டோபர் 16-ல் அடிப்படைவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம், பாகிஸ்தான் ஜனநாயகத்தின் மரணம் என்றே மூத்த அரசியல்வாதிகளும் அரசியல் சிந்தனையாளர்களும் கருதுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x