Published : 13 Sep 2015 11:52 AM
Last Updated : 13 Sep 2015 11:52 AM
‘அவரு ரொம்ப நல்ல மனுசன்’, ‘நேர்மையானவரு’, ‘எளிமை யானவரு’, ‘24 மணி நேரமும் நாட்டைப் பத்தியே கவலைப்பட்டவரு’, ‘தனக்காக எதையுமே சேர்த்து வெச்சிக் காதவரு’, ‘நாட்டைப் பாதுகாக்கறதுக் காக ஏவுகணைத் தயாரிச்சவரு’, ‘நடக்க முடியாத குழந்தைகளுக்காக 400 கிராம்ல செயற்கைக் கால் செஞ்சவரு’, ‘அவருக்கு எங்களை ரொம்ப பிடிக்கும், அதனால எங்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்’.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரைப் படிக்கும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கலாம் குறித்து சொன்ன வார்த்தைகள்தான் இவை.
கலாம்… காலமான பிறகு பல் வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை நான் சந்தித்து கலாம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட போது, அவரைப் பற்றி போட்டிப் போட்டுக்கொண்டு ஏராளமான தகவல்களை ஆர்வத்துடன் கூறினார்கள்.
குழந்தைகளின் மேற்கண்ட மதிப் பீடுகள் ஏதோ பேச்சுவாக்கில் சொல்லப் பட்டவை அல்ல. ஒவ்வொரு கருத்துக்கும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து உதாரணங்களை விளக்கமாகச் சொன்னார்கள். “எளிமையானவர் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டதும், “அவருக்கு இருந்த சொத்து 2 சூட்கேஸுகள்தான் சார்” என்று தெளி வாக கூறினார்கள். “அவரு ஜனாதிபதி ஆனதும் சொத்தக்காரங்களை எல்லாம் சென்னையில் இருந்து டெல் லிக்கு ரயில்ல அரசாங்கமே அனுப்பி வெச்சுது. ஆனா, அவங்க எல்லாருக் கும் ஆன டிக்கெட் செலவை அவரே கொடுத்திட்டாரு’’.
“அவருக்கு கிரைண்டர் பரிசா கொடுத்தவங்ககிட்ட அதுக்கான செக் கொடுத்தாரு. அதை பேங்க்ல மாத்த லேன்னு தெரிஞ்சதுமே, ‘நீங்க பேங்க்ல நான் கொடுத்த செக்கை போடலேன்னா, நீங்க கொடுத்த கிரைண் டரைத் திருப்பி அனுப்பிடுவேன்’னு சொன்னாரு.” இப்படி பல்வேறு சம்பவங் களை அடுக்கடுக்காக விவரித்தார்கள்.
நான் சந்தித்த மாணவ, மாணவிகளில் கிட்டத்தட்ட யாருமே அப்துல் கலாமின் சுயசரிதையான ‘அக்னிச் சிறகுகள்’ நூலை சிறிதளவுகூட படிக்கவில்லை. ஆனால், அவர் மறைந்த தகவல் வெளியான நாளில் இருந்து ஊடகங்களில் வெளியான அத்தனை செய்திகளையும் துல்லியமாக குழந்தை கள் அறிந்து வைத்திருந்ததை நேரடியாகக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
என் நண்பர் ஒருவரின் 5-ம் வகுப்பு படிக்கும் குழந்தையும், 9-ம் வகுப்பு படிக்கும் குழந்தையும் 3 நாட்களாக சரியாக சாப்பிடாமல், மிகவும் துக்கத்தில் மூழ்கி இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு நான் செல்லும்போதெல்லாம் ‘‘கலாம் சாரை சந்திக்க எங்களை அழைத்துச் செல்லுங்கள்’’ என்று ஆர்வத்துடன் கேட் பார்கள். அந்த விருப்பத்தை என்னால் கடைசிவரை நிறைவேற்றவே முடிய வில்லை.
கலாம் நல்லடக்கம் செய்யப்படு வதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அந்த நண் பர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘கலாம் சாரின் முகத்தை கடைசியாக ஒரு தடவையா வது பார்த்து விட வேண்டும். நாம் ராமேசுவரம் போக லாம்ப்பா என்று என் குழந்தைகள் கேட்கின்றன. நீங்கள் ராமேசுவரம் செல் வதாக இருந்தால், நானும் குழந்தை களை அழைத்துக் கொண்டு உங் களுடன் வருகிறேன்’’ என்றார்.
10 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான எனது குடும்ப நண்பர் ஒருவரும் இதே போன்று என்னிடம் கூறினார். அவரது மனைவி பிறந்ததில் இருந்தே பேசும் திறனையும், கேட்கும் திறனையும் பறிகொடுத்தவர். முதல்முறையாக என் வீட்டுக்கு அவர்கள் இருவரும் வந்திருந்தபோது, புத்தக அலமாரியில் இருந்த ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தை எடுத்து, ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்த நண்பரின் மனைவி, ‘‘பள்ளிக்கூடத்தில் படித்தபோது இதை கொஞ்சம் படித் திருப்பதாக தெரிவித்தார். அவரும் தன் கணவரிடம் தன்னை ராமேசுவரம் கூட்டிச் செல்லும்படி கட்டாயப்படுத்தி யிருக்கிறார். கலாம் அவர்களின் முகத்தை கடைசித் தடவையாக பார்த்துவிட வேண்டும் எனக் குழந்தை போன்று அடம்பிடித்திருக்கிறார். அந்த நண்பரால் மனைவியின் விருப்பதைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை.
“சிவலிங்கம் சார் கண்டிப்பா ராமேசுவரம் போவாரு. அவர்கூட நான் போயிட்டு வர்றேன், என்னை அனுப்பி வைங்க” என்றதும் அந்த நண்பர் என் னைத் தொடர்புகொண்டார். ‘‘சார் நீங்க ராமேசுவரம் போகும்போது உமாவையும் அழச்சிட்டு போங்க’’ என்று அன்புக் கட் டளையிட்டார். என் இயலாமையை நான் கூறியதும், சற்று கோபித்துக் கொண்டார்.
இப்படி எத்தனையோ பேர் தங்கள் நெருங்கிய சொந்தத்தைப் பறிகொடுத்து விட்டதைப் போல பரிதவித்தனர். திரும்பிய பக்கமெல்லாம் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பேனர்கள் காட்சியளித்தன. இந்திய மக்கள் அனைவரின் இதயங்களிலும் எப்படி இவரால், இப்படி இடம்பெற முடிந் தது? அனைத்து மக்களையும் அவர் அளவுகடந்து நேசித்ததன் பிரதிபலிப்பு தான் இது.
அவரது ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் உடன் இருந் தவர்களிடமும் அவரை சந்தித்தவர் களிடமும், ஏதாவது ஒரு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்தன.
“கலாம் சாரைப் பற்றி எவ்வளவோ பேசுகிறோம், அவருக்கு துயரத்துடன் அஞ்சலி செலுத்தினோம், ஆனால், அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் மூலம் நாம் என்ன செய்யப்போகிறோம்?” பள்ளிக் குழந்தை களிடம் இந்தக் கேள்வியை நான் கேட்டேன்.
“2020-ல் இந்தியாவை வல்லரசாக்கு வோம் சார்”
“வல்லரசு என்றால்?”
“டெவலப்டு இந்தியா சார்!”
“டெவலப்டு இந்தியா என்றால்?”
“எல்லாத் துறைகளிலும் இந்தியாவை முன்னேற்றுவது!”
அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி களில் படிக்கும் மாணவ, மாணவியரின் பதில்கள் இவை.
‘விஷன்-2020’ என்ற தொலைநோக் குத் திட்டத்தைப் பள்ளிக்கூட குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு கலாம் ஏன் முன்னுரிமை கொடுத்தார்? என்பதை இந்த பதில்கள் நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன.
‘விஷன்-2020’ ஆவணம் உருவாக்கப் பட்டப் பிறகு, இதுகுறித்து பள்ளிக் குழந்தைகளிடம் விரிவாக எடுத்துச்சொல்ல வேண்டும் என கலாம் தெரிவித்தபோது, அவரது அணியினர் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
- சிறகு விரியும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
mushivalingam@yahoo.co.in
மு.சிவலிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT