Last Updated : 26 Jun, 2020 06:32 PM

 

Published : 26 Jun 2020 06:32 PM
Last Updated : 26 Jun 2020 06:32 PM

காற்றில் கரையும் அதிசய பாறை சிவகங்கை அருகே பிரம்மிப்பு

சிவகங்கை அருகே திருமண்பட்டி பகுதியில் காணப்படும் காற்றில் கரையும் அதிசய பாறைகள்.

சிவகங்கை

சிவகங்கை அருகே பல்வேறு அமைப்புகளுடன் காற்றில் கரையும் அதிசய பாறைகள் காணப்படுகின்றன. இந்த பாறைகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கையில் பல்வேறு தொல்லியல் எச்சங்களும், இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன. திருமலையில் இருந்து மலம்பட்டி வரை ஆங்காங்கே சிறு, சிறு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. இதில் ஏரியூர் மலையில் 15 டன் கொண்ட ஆகாச பாறை உள்ளது.

இந்த பாறை கையளவு நுனியில் நிற்கிறது. அதனருகிலேயே திருமன்பட்டி பகுதியில் உள்ள குன்றில் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைத்தாற்போல் பாறைகள் காணப்படுகின்றன. இந்த பாறைகளை அருகில் சென்று பார்த்தால் உருண்டு விடுமோ அச்சம் ஏற்படும்.

ஆனால் பல நூறு ஆண்டுகளாக இந்த பாறைகள் அப்படியே உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக தொடர்ந்து வீசும் காற்றால் சேதமடைந்து பாறைகள் கரைந்து வருகின்றன. அருகிலேயே மூன்று நபர்கள் சென்று வரும் அளவிற்கு குகையும் உள்ளது.

இதேபோல் ஏராளமான அடுக்கு பாறைகள் உள்ளன. அவற்றை சுற்றுலாதலமாக அறிவிக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரான இலந்தக்கரை ஜெமினி ரமேஷ் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அறியப்படாத சுற்றுலா தலங்கள் மறைந்து கிடக்கின்றன. காற்றில் கரையும் அதிசய பாறைகள் திருமண்பட்டி-மலம்பட்டி அருகே உள்ள குன்றில் காணப்படுகின்றன. அவை ஏரியூர் ஆகசப்பாறை போன்று உள்ளன. ராணுவ நடைபோல கம்பீரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு பாறையும் கூலாங்கற்களை அடுக்கியது போல் அழகுற காட்சியளிக்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இடத்தில் ஏராளமான சுனைகள் காணப்படுகின்றன.

திருமலை, ஏரியூர், திருமண்பட்டி பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்கலாம். இதன்மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x