Published : 27 May 2020 09:16 AM
Last Updated : 27 May 2020 09:16 AM

ஆடுகள், நகையை விற்று விமான டிக்கெட் வாங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: கடைசியில் விமானம் ரத்தானதால் அதிர்ச்சி

ரத்தான விமான டிக்கெட்டுடன் ஃபாரித் முல்லா என்ற புலம்பெயர் தொழிலாளர்.

மகாராஷ்ட்ரா தானே பகுதியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பையிலிருந்து கொல்கத்தா செல்ல விமான டிக்கெட்டுகளை வாங்க தங்கள் ஆடுகள், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை விற்றதோடு கடனும் வாங்கியுள்ளனர்.

கையில் இருந்த காசெல்லாம் இதில் போக தற்போது விமானம் ரத்தானதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சோனா முல்லா, ரஹீமா காத்தும், ஃபாரித் முல்லா ஆகியோர் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கொல்கத்தா செல்ல விமான டிக்கெட்டை படாதபாடு பெற்ற நிலையில் மும்பை விமான நிலையத்துக்கு ரூ.2000 செலவு செய்து டாக்ஸியில் வந்தனர். வந்த பிறகுதான் தெரிந்தது விமானம் இப்போதைக்குப் புறப்படாது என்று.

இந்தச் சம்பவம் வீடியோ மூலம் வைரலாக இண்டிகோ விமான சேவை நிறுவனம் இவர்களை வேறு விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது. இப்போது ஜூன் 1ம் தேதி இவர்களை கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் கொல்கத்தா கொண்டு சேர்க்க இண்டிகோ விமான நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக சோனா முல்லா கூறும்போது, “லாக் டவுன் காரணமாக 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் இல்லை. ரயில் டிக்கெட்டுகளுக்காக முயற்சித்தோம் முடியவில்லை. அப்போதுதான் முர்ஷிதாபாத்தில் என் மனைவி 3 ஆடுகளை விற்று அதன் மூலம் ரூ9,600ஐயும் கடனாக ரூ.1000-மும் வாங்கி அனுப்பினார், நாங்கள் டிக்கெட்டுகளை வாங்கினோம்” என்றார்.

சோனா முல்லா ஏர்கண்டிஷனர் ரிப்பேர் ஷாப்பில் உதவிப்பணியாளராக சிறு வேலையில்தான் இருந்தார். நான் கடந்த 20 மாதங்களாக தொடர்ந்து வேலை பார்த்து வந்தேன். ஆனால் என் 3 மகள்கள் மற்றும் என் மனைவி நான் திரும்பி வர வேண்டும் என்று விரும்பினர். என் மகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டும், இந்த லாக்டவுன், கரோனா இல்லையெனில் நாங்கள் இதில்தான் கவனம் செலுத்தியிருப்போம், நான் திரும்பி ஊர் சேர்வதை யோசித்திருக்க மாட்டோம்” என்கிறார் சோனா முல்லா.

காத்தும் என்ற மற்றொரு புலம் பெயர் தொழிலாளர் தன் தங்க மோதிரத்தை விற்று, பிறகு கடனையும் வாங்கி விமான டிக்கெட் எடுத்துள்ளார்.

விமான ரத்து அதிர்ச்சியை அடுத்து மீண்டும் 2,000 செலவழித்து காரில் திவா வந்துள்ளனர். இப்போது இவர்கள் ஜூன் 1ம் தேதி கொல்கத்தாவுக்கு இண்டிகோவின் உதவியினால் திரும்புகின்றனர்.

-சிறப்பு நிருபர், தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x