Published : 08 May 2020 04:15 PM
Last Updated : 08 May 2020 04:15 PM
’’நடிகன் என்று பேரெடுத்திருந்தாலும் எப்போதும் எனக்கு டைரக்ஷன் சைடுதான் சிந்தனை இருக்கும். ‘இந்தக் கதைக்கு இந்த முகம் நல்லாருக்கே’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே இருப்பேன்’’ என்கிறார் நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன்.
‘இந்து தமிழ் திசை’ யின் ‘RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, சிவசந்திரன் நீண்ட நெடிய பேட்டியளித்தார். ’இதுதான் நான் முதன்முதலாகத் தரும் வீடியோ பேட்டி’ என்றார்.
அவரின் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :
சிவசந்திரன் பேட்டி தொடர்கிறது:
’’எம்.ஏ.காஜாவின் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அப்புறம், கே.விஜயனோட ‘தூரத்து இடி முழக்கம்’ படத்துல நடிச்சிருந்தார். இந்தப் படங்களைப் பாக்கும்போது, விஜியோட முகம் எனக்கு பச்சக்கென மனசுல பதிஞ்சுச்சு. ‘அட... இந்த முகம் புதுசா இருக்கே’னு ஒரு ஈர்ப்பு வந்துச்சு.
ஒருவிழால, விஜயகாந்தை சந்திச்சேன். அப்போ இப்ராஹிம் ராவுத்தர்தான் கூடவே இருந்து எல்லாமும் பண்ணினார். அப்புறம்தான் ராவுத்தர் சேர்ந்துச்சு. அப்ப இப்ராஹிம் மட்டும்தான். அப்பலேருந்தே விஜயகாந்த் கூட நல்ல பழக்கமாச்சு.
அடிக்கடி விஜயகாந்துகிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன்... ‘விஜி, கொஞ்சம் கான்ஸண்ட்ரேட் பண்ணி, படம் ஒத்துக்கோ. உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு’ன்னு அடிக்கடி சொல்லுவேன்.
அதுக்குப் பிறகு, விஜயகாந்துக்கு நிறைய படங்கள் வந்துச்சு. வெற்றி மேல வெற்றியா குவிஞ்சுச்சு. அவரோட சேர்ந்து ரெண்டுமூணு படங்கள் பண்ணிருக்கேன். எல்லாமே நல்ல படங்கள். விஜயகாந்த்கிட்ட இருக்கிற நல்ல குணம் என்னன்னா, நாம ஒண்ணு சொன்னா கேட்டுக்குவாரு. ’சிவா நீ படிச்சவன். சொன்னா சரியா இருக்கும்யா’ன்னு சொல்லுவார்.
விஜயகாந்தை சுத்தி எப்பவுமே நிறைய நண்பர்கள் இருப்பாங்க. அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள். இன்னொரு முக்கியமான விஷயம்... விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அவரைப் போல் ஒரு மனிதரைப் பார்க்கமுடியாது.
இன்றைக்கு அவர் கட்சி ஆரம்பிச்சிட்டார். தலைவர் அப்படி இப்படின்னெல்லாம் கூப்புடுறாங்க. ஆனா, அவரை ஏதாவது விழால நான் பாத்தேன்னா, ‘விஜி’ன்னுதான் கூப்பிடுவேன். வேற மாதிரிலாம் கூப்பிட்டு பழக்கமில்லை எனக்கு. ‘விஜி’ன்னுதான் கூப்பிடுவேன். எவ்ளோ கூட்டம் இருந்தாலும், அதைக் கேட்டுட்டு, ‘சிவா’ன்னு ஓடி வந்துருவாரு. ‘என்ன சிவா நல்லாருக்கியா?’ன்னு ஓடிவந்து பேசுவாரு. அதான் நல்ல மனிதர். அருமையான நண்பர். ’என்ன சிவா, முடியெல்லாம் கொட்டிருச்சு’ன்னு கலாட்டாலாம் பண்ணிப் பேசினார்.
நட்புங்கறதும் அம்மா போலத்தான். நீ எதுக்கு ராஜாவா இருந்தாலும் தாய்க்குப் பிள்ளைதான். அப்படித்தான் நட்புங்கறதும். எந்த நிலையில இருந்தாலும் நண்பன், நண்பன் தான். இதை மாற்றிப் பார்க்காதவர் விஜயகாந்த். நானும் அவர்கிட்ட நட்பாத்தான் இருந்துக்கிட்டிருக்கேன். திடீர்னு, ‘தலைவான்னெல்லாம் கூப்பிட்டா, அங்கே சிவசந்திரன் காணாமப் போயிருவான். பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டான்’னு அர்த்தம்.
நான் எப்பவுமே ஸ்ட்ரெயிட்டா சொல்லிருவேன். ‘நீ பண்றது ரைட்டுன்னா ரைட்டு. தப்புன்னா தப்பு’. அவ்ளோதான். எங்கிட்ட இப்படியொரு கதை சொன்னாங்க. அப்புறம் என்னை ஏமாத்தி பண்ண வைக்கிறாங்க. எனக்குப் பிடிக்கலை. அதனால நடிக்கலை. எனக்குப் புடிக்கலைன்னா புடிக்கலை. எனக்கு வாழ்றதுக்குத் தேவையான வருமானம் கம்மியா இருந்தாக் கூட போதும். அப்புறம் நான் ஏன் பொய் சொல்லணும்? நான் உண்மையா இருக்கணும்னு ஆசைப்படுறவன். அப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்’’ என்றார் சிவசந்திரன்.
- நினைவுகள் தொடரும்
சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT