Published : 23 Apr 2020 09:26 AM
Last Updated : 23 Apr 2020 09:26 AM
நம் நேரத்தை நமக்குத் தெரியாமல் நிறைய பேர் எடுத்துக் கொண்டுளார்கள் மிக முக்கியமாக தொழில்நுட்பம். அதில் தொலைக்காட்சிப் பெட்டி, கையடக்க செல்போன், வீடியோ கேம்ஸ் என ஒவ்வொரு வீட்டிற்கு ஏற்ப பட்டியல் போடலாம்.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் குழந்தை வளர்ப்பு அல்லது பேரண்டிங் என்ற சொல்லே நமது நாட்டில் பேசு பொருளாக இருக்கவில்லை.
இது கிட்டத்தட்ட ஒரு மேற்கத்திய கரு தான். தமிழகத்திலும் ஏன் இந்தியாவிலும் குழந்தை வளர்ப்பு மீது கவனம் குவிவது இந்த 20-30 ஆண்டுகளாகத்தான். மேற்கில் எது எடுத்தாலும் பணம் செய்யக்கூடிய விஷயம் தான். ஆனால் நாம் இதனை அந்த நோக்கில் பார்க்க வேண்டுமா?
நிச்சயமாக நம் வாழ்க்கை முறை நிறையவே மாறி இருக்கின்றது. வேகம் கூடி இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் நேரம் சுருங்கியும் இருக்கின்றது. நம் நேரத்தை நமக்குத் தெரியாமல் நிறைய பேர் எடுத்துக் கொண்டுளார்கள் மிக முக்கியமாக தொழில்நுட்பம். அதில் தொலைக்காட்சிப் பெட்டி, கையடக்க செல்போன், வீடியோ கேம்ஸ் என ஒவ்வொரு வீட்டிற்கு ஏற்ப பட்டியல் போடலாம். இவை அனைத்தும் நேரத்தை மட்டுமல்ல அவர்கள் உளவியலிலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றது.
சுதந்திரம் அடைந்த இந்தியா எழுபத்தி ஐந்தாம் ஆண்டை நோக்கி நடக்கின்றது. அதன் பெரும் விளைவில் ஒன்று கல்வி அறிவு. சுமார் நான்கு – ஐந்து தலைமுறையினர் கல்வி அறிவு பெற்றுள்ளனர். சிலர் இன்னும் முதல் தலைமுறையினராகவும் உள்ளனர். ஆனால் இந்த நான்கு தலைமுறை கல்வியறிவு என்பது நம்மில் பெரும் மாற்றத்தையும் ஒரு ஒழுக்கத்தினையும் உண்டு செய்திருக்க வேண்டும்.
அதன் முக்கிய பிரதிபலிப்பு குழந்தை வளர்ப்பில் இருந்திருக்க வேண்டும். ஏனோ அங்கே கவனம் குவியவே இல்லை. கடந்த தலைமுறையில் இது பேசு பொருளாய் இருந்ததே இல்லை.
அப்ப எல்லாம்.. என்று நாங்க குழந்தைகளை எப்படி வளர்த்தோம் என்று பெருமைப்பட்டாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்தன. பெண் – ஆண் குழந்தை பாகுபாடு தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. அது பூஜ்ஜியத்தை நோக்கி நகரவேண்டும்.
குழந்தை வளர்ப்பில் பெரும்பாலும் பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கும் இன்னும் பெரும்பாலும் குறைச்சலாகவே உள்ளது. பள்ளி ஆண்டுவிழாக்களிலும் தகப்பன்களின் எண்ணிக்கை இன்னும் சொற்பம் தான்.
தாய்மை என்பதைப்போல தந்தைமை பற்றிய கருத்தாக்கம் எழுவே இல்லை. இப்படி முந்தைய தலைமுறையில் இருந்து நகர்ந்து வந்தாலும் நகர வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கின்றது.
நாம் ஆண்டாண்டாக பெற்ற கல்வியும் தொழில்நுட்பமும் எப்படி குழந்தை வளர்ப்பில் வலுசேர்க்கப்போகின்றது என்பதில் கவனம் தேவை. தொழில்நுட்பம் நிறைய கவனச்சிதைவினை நோக்கிச்செல்கின்றது. நாமும் எதனை நோக்கி செல்கின்றோம் என்றே பலசமயம் புரிவதில்லை. குழந்தை என்னவாக வேண்டும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால் அது ஒவ்வொரு முறையும் புதிய புதிய பரிமாணத்தினை எடுக்கும். சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் சிறந்த என்பதற்கான அர்த்தம் கூர்மையாகிக்கொண்டே செல்லும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தினை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சிக்கல் ஏற்படும். குழந்தைகளுக்கான சிக்கலுன்னு யாரோ ஒருவரின் வழிகாட்டுதல் இருக்கலாம் ஆனால் 100% சதவீதம் நிவாரணம் தரும் தீர்வு சர்வநிச்சயமாக கிடையாது.
ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு குடும்ப சூழலும் தனித்துவமானவை, ஒவ்வொரு வயதினரும் வேறு வேறு விதமான சிந்திக்கக்கூடியவர்கள்,
ஆதனால் பெற்றோர்களை அனைத்தையும் உள்வாங்கி பிரச்சனைகளுக்கு தீர்வினை நோக்கி நகர்த்த முடியும். பல சமயங்களில் அவை பிரச்சனைகளே அல்ல அது அந்த வயதில் நிகழும் சாதாரண நிகழ்வு என்ற தெளிவும் ஏற்படும்.
மிகக்குறிப்பாக வளரிளம் பருவத்தினரை கையாளும் சிக்கல்கள் இந்த வகைகையில் அடங்கும். உடலில் நடக்கும் மாற்றங்களினால் மனதளவில் நிறைய குழப்பங்கள் நிகழும் அதன் வெளிப்பாடாக நிகழும் சிலவற்றை பிரச்சனை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
இங்கே பேசிய விஷயங்கள் எல்லாம் எல்லா குடும்பங்களுக்கும் பொருந்துமா? இன்னும் தினசரி வாழ்க்கைப் போராட்டத்திற்கு சிரமப்படும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு எப்படி இந்த விஷயங்கள் போய்ச் சேரும்?
இந்தக் கேள்வியை ஒரு லைவ் நிகழ்வில் நெறியாளர் கேட்டார்.
அது ஒரு நல்ல தேடலுக்கு வழிவகுத்தது. சில வருடங்களுக்கு பின்னர் அந்த சிரமமான கேள்விக்கு எளிய கேள்விக்கு பதில் கிடைத்தது.
“பள்ளி ஆசிரியர்கள்”
அவர்கள் கூடுதலாக பெற்றோர்களின் பொறுப்பினையும் சுமக்கின்றார்கள்.
- விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT