Published : 13 Apr 2020 07:21 PM
Last Updated : 13 Apr 2020 07:21 PM
கரோனா ஊரடங்கு உயிர் காக்கும் உத்தி என்றாலும் கூட உணவும், அடிப்படைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் இல்லாவிட்டால் கவசம் கூட சிலருக்கு சுமையாகிவிடுகிறது.
அன்றாடம் தொழில் செய்து சம்பாதித்தால் மட்டும் வீட்டில் அடுப்பெறியும் என்ற நிலையில் வாழும் தொழிலாளிகள் ஏராளம் ஏராளம். அவர்களுக்கு கரோனா ஊரடங்கு உயிர் காக்கும் கவசம் என்பதைக் காட்டிலும் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சுமையாகவே உள்ளது.
அவர்களும் அவர்களின் குடும்பங்களும் பசியினால் மிகவும் சோர்ந்து போயுள்ளது. அரசு அளித்த ரூ.1000-மும் ரேஷன் பொருட்களும் இல்லாவிட்டால் இவர்களின் நிலைமை இன்னும் இன்னும் மோசமான நிலையில் இருந்திருக்கும்.
எதோ சம்பாதிக்கிறோன், எப்படியோ வாழ்க்கையை நகர்த்துகிறோம் என்று புலம்பிய சில தொழிலாளர்களை சந்தித்தோம்.
பாளையங்கோட்டை கரும்பு சாறு கடைக்காரரும் , வீரமணிக்கபுரம் நடமாடும் தையல் காரரும் கூறிய வார்த்தை மிகவும் வருத்தத்திற்குரியது ..
"தனது கைகளைக் குவித்து சைகையால் .. பசிக்குது என்ன செய்ய சார் . .அதான் வெளிய வர வேண்டியதாகிப் போச்சு" என்று தையல் தொழிலாளி ஒருவர் கூறியது வேதனைக்குரிய காட்சியாக இருந்தது,
இரண்டு பிள்ளைகள் இருக்கிறது .. வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் இல்லையேல் வீட்டுக்காரர் கோவித்துக்கொள்வார். நாம பட்டினி கிடைக்கலாம் ஆனால் பிள்ளைகள் கிடப்பதை ஜீரணிக்க முடியவில்லை என்று கரும்பு ஜூஸ் கடைக்காரர் சொன்னார்.
அருகம்புல் விற்கும் பாட்டியின் முகத்தில் பசி ரேகையும் ஊரடங்கு எத்தனை காலமோ என்ற அச்ச ரேகையும் முதுமை ரேகையுடன் இணைந்திருந்தது.
புகைப்படங்கள் உங்கள் கண் முன்னே.. இவர்களுக்கான பதில் எங்கே?!
எழுத்து; படங்கள்: மு.லெட்சுமி அருண்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT