Last Updated : 02 Aug, 2015 01:19 PM

 

Published : 02 Aug 2015 01:19 PM
Last Updated : 02 Aug 2015 01:19 PM

ஒரு நிமிடக் கதை - நேரம்

ராம் அந்த அலுவலகக் கிளைக்கு புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர். ஐம்பதை கடந்தவர். மேலாளர் என்றாலும் பணியாளர்களை தன் அன்பினால் கட்டுப்பாடுடன் வைத்திருப்பவர். அந்தக் கிளைக்கு செல்லும் முன்னரே சக அலுவலர்கள் அவரை எச்சரித்திருந்தனர்.

“சார், அந்த ஆபிஸா...? அங்க வேலையே நடக்காதே!”

“அந்தக் கிளை நஷ்டத்துல போகுதே... எப்படி சரிபண்ணு வீங்க?”

“அங்க மானேஜர்தான் எல் லாத்தையும் தலைமேல போட்டுக்கணும்.”

- இப்படி பல விமர்சனங்கள். ராம் அதற்கெல்லாம் அசராமல் துணிந்து அந்தக் கிளைக்கு சென்றார்.

பணியிடம் மாறி ஒரு மாதம் ஆனது. தலைமை அலுவலகத்தில் இருந்து ஒருநாள் போனில், “உங் களை அந்தக் கிளைக்கு அனுப்பியதே, அதை நஷ்டத் தில் இருந்து மீட்கத்தான்.. நீங்கள் வந்தும் அப்படியே இருந்தால் எப்படி?” என்று கடிந்தனர்.

ராம் என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். அவரிடம் மதிப்புடன் பழகும் பியூன் சபேசன், “சார் பேசாமல் நீங்களும் வேறு இடம் டிரான்ஸ்ஃபர் வாங்கிடுங்க” என்றார்.

ராம் அமைதியாக “நமக் குரிய பொறுப்பை நாம் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

சில நாட்களில் உடல் நலக் குறைவால் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார் சபேசன். ஒரு மாதம் கழிந்தது. அந்த கிளை நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபம் காட்டியது. தலைமை அலுவலகத்தில் இருந்து ராமை பாராட்டினர்.

பணிக்கு திரும்பிய சபேசன் ராமிடம், “எப்படி சார் உங் களால முடிந்தது?” என்றார்.

“சபேசன், ஆபிஸ் சுவரை பாத்தீங்களா?” என்றார் ராம்.

ஆபிஸ் சுவரில் மாட்டி இருந்த சுவர் கடிகாரம் கழட்டப் பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தார் .

“ஆமா... சபேசன். கடி காரத்த கழட்டி வச்சுட்டா யாரும் மணி பாக்கமாட்டாங்க இல்லையா?” என்றார்.

“அது சரி சார், இப்பதான் எல்லோருக்கும் கையில வாட்ச், செல்போன் இருக்கே. அதுல மணி பாக்க மாட்டாங்களா?”

“எல்லாம் இருக்கு. ஆனா வேலை பாக்குற இடத்துல பிரதானமா இருக்குற கடி காரத்துலதான் அவங்க கவனம் எப்பவும் இருக்கும். வேலையில கவனம் இருக்காது. ஆபிஸ் நேரத்துக்கு கரெக்டா சாப்பிடப் போவேன், வீட்டுக்குக் கிளம்புவேன்னு யாரும் சொல்ல முடியாது. அவங்க நேரத்துக்கு கிளம்பு றேன்னு சொன்னா, நான் இன்னும் நேரம் இருக் குன்னு சொல்லிடுவேன்” என்று அர்த்தத்துடன் சிரித்தார் ராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x