Published : 13 Aug 2015 10:48 AM
Last Updated : 13 Aug 2015 10:48 AM

ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் 10

மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்று அழைக்கப்பட்டவரும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவருமான ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l லண்டனில், லேடோன்ஸ்டோன் என்ற இடத்தில் பிறந்தவர் (1899). அப்பா, காய்கறிக் கடை வைத்திருந்தவர். சிறு வயதில் குழந்தையின் குறும்புத்தனங் களுக்கும் கடுமையான தண்டனை வழங்குவார். தனது 15-வது வயதில் ஹென்லே டெலிகிராஃப் என்ற கேபிள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.

l அதே நேரத்தில் லண்டன் பல்கலைக் கழகத்தில் ஓவியக் கலை பற்றியும் படித்துவந்தார். அந்த நிறுவனத்தின் இதழ்களில் கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தார். 1919-ல் வெளிவந்த இவரது முதல் கதை ‘காஸ்’ ஒரு சஸ்பென்ஸ் கதை. 300-க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார்.

l 1920-ல் பிரிட்டனில் தொடங்கப்பட்ட பாரமவுன்ட் பிக்சர்ஸ் என்ற அமெரிக்க திரைப்படக் கிளை நிறுவனத்தில் சேர்ந்தார். இங்கே திரைக்கதை, இயக்கம், கலை ஆகிய அனைத்துத் துறைகளி லும் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டார். 1922-ல் முதன்முதலாக இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் தொடங்கிய சில படங்கள் பாதியில் நின்றன.

l 1927-ல் ‘தி லட்ஜர்’ படம் ரிலீஸ் ஆனது. இதன் வெற்றி இவரைப் பிரபல இயக்குநராக அடையாளம் காட்டியது. 8 மவுனப் படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் பேசும் படம், 1929-ல் வெளிவந்த ‘தி பிளாக்மெயில். 1939 வரை ஹிட்ச் காக் பிரிட்டிஷ் சினிமாவில் படங்களை இயக்கிவந்தார்.

l ‘தி 39 ஸ்டெப்ஸ்’ படத்தின் வெற்றி இவரது பெயரை ஹாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் குடியேறினார். 1940-ல் வெளி வந்த இவரது முதல் ஹாலிவுட் படம் ‘ரெபெக்கா’ சிறந்த படத்துக் கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. அதன் பின் 36 ஆண்டுகள் தொடர்ந்து ஹாலிவுட் திரையுலகம் இவரிடம் மயங்கிக் கிடந்தது.

l இவரது திரைப்படம் தயாரிக்கும் பாணி அலாதியானது. “படம் பார்ப்பதற்காகத் திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் படத்தைப் பார்த்து அலற வேண்டும். திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. பார்வையாளர்களை அலறவைக்கும் யுத்தியைப் பற்றித்தான் எனக்கு அக்கறை. என் படங்கள் உலகில் எந்த இடத்தில் ஓடினாலும் ரசிகர்கள் ஒரே மாதிரி திகிலடைய வேண்டும்” என்பார் இந்தத் திகில் மன்னன்!

l தொழில்நுட்பரீதியிலும், திரைப்படக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் உலக சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் என்று புகழப்பட்டவர். இவரது பாத்திரப் படைப்புகள் உளவியல் ரீதியானதாக இருக்கும்.

l இவரிடம் ‘சிறந்த படம் எடுக்க என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டபோது, ‘மூன்று அம்சங்கள் வேண்டும்’ என்றார், அவை, ‘திரைக்கதை, திரைக் கதை, திரைக்கதை’ என்று கூறியுள்ளார். கதாநாயகிகளை தனித்தன்மையுடனும், ஆபத்து ஏற்படும்போது சுயமாக சிந்தித்துப் போராடுபவர்களாகவும் வெளிப்படுத்துவார். நடிகர்களைப் படாதபாடு படுத்துவாராம்.

l தான் எதிர்பார்க்கும் மிகச் சரியான பாவனை வெளிப்படும்வரை அவர்களை விட மாட்டாராம். மொத்தம் 14 பேசும் படங்களை எடுத்தார். இவரது மாஸ்டர் பீஸ் எனப் புகழப்படும் ‘சைக்கோ’, ‘சஸ்பென்ஷன்’, ‘ரியர் வின்டோ’, ‘தி மான் ஹூ நோ டூ மச்’ ‘வெர்டிகோ’, ‘யங் அன்ட் இன்னொசன்ட்’, ‘பேர்ட்ஸ்’, ‘தி லேடி வானிஷஸ்’, ‘சபடேஜ்’, ‘ரோப்’ ‘ஃபாரின் கரஸ்பான்டன்ட்’ ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

l இவர் 53 திரைப்படங்களை எடுத்துள்ளார். திரையுலகுக்கு அற்புதக் கொடைகளை வழங்கியவர் எனப் பாராட்டப்படும், திகில் மன்னர் ஆல்ஃபிரெட் ஹிட்ச் காக் தன்னுடைய 80-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x