Published : 27 Nov 2019 07:07 PM
Last Updated : 27 Nov 2019 07:07 PM

மதுரையில் பரோட்டா தயாரிக்க பயிற்சி மையம் நடத்தும் இளைஞர்

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பயிற்சி மையம் மூலம் புரோட்டோ தயாரிப்பதற்கு இளைஞர்களுக்கு பயிற்சிஅளித்து வருகிறார்.

மதுரை கூடல்நகரைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது காசிம் (27).

பிளஸ் 2 படித்துள்ள இவர் தற்போது பரோட்டா தயாரிப்பதற்கு பயிற்சி மையம் நடத்திவருகிறார். இவரது குடும்பத்தினர் 3 தலைமுறையாக சிக்கந்தர்சாவடியில் பரோட்டா கடை நடத்தி வருகின்றனர்.

தற்போது கூடல்நகரில் பயிற்சி மையம் மூலம் புரோட்டோ தயாரிப்பதற்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதற்காக ஆட்டோக்களில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம் பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அ.முகமதுகாசிம், "பரோட்டா அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் புரோட்டா கடைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பரோட்டா மாஸ்டர்களுக்கு உள்ளூரிலும், வெளியூரிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதன் தேவையறிந்து பயிற்சி அளித்து வருகிறேன்.

இப்பயிற்சியில், பன் பரோட்டா, சிலோன் பரோட்டோ, வீச்சு பரோட்டா, ரோல் பரோட்டா உள்பட பலவகை பரோட்டாக்கள், கறி தோசை வகைகள், கிரேவி தயாரிப்பதற்குரிய 30 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், அசைவ மற்றும் சைவ புரோட்டா தயாரிப்பதற்கும் பயிற்சிஅளிக்கப்படும். இங்கு பயிற்சி பெற்றவர்கள் நாளொன்றுக்கு ரூ. 800 முதல்ரூ.1200 வரை சம்பாதிக்கின்றனர்.

காலை 7 மணியிலிருந்து 10 வரை, மாலை 6 லிருந்து 10 மணிவரை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓராண்டில் 200 பேருக்கு மேல் பயிற்சி அளித்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x