Published : 09 Jul 2015 10:55 AM
Last Updated : 09 Jul 2015 10:55 AM
“இங்க பாரு ஆனந்தி... இனி மேல் அக்கா வீட்டுக்கு போக ணும், அண்ணன் வீட்டுக்குப் போகணும்னு சொல்லாதே. வேணும்னா நீ மட்டும் போய்க்கோ. நம்ம ராகேஷையும் ஆருஷியையும் கூட்டிட்டு போக வேண் டாம்!” - ரயில் புறப்பட்டதும் மனைவியிடம் கொட்ட ஆரம்பித்தான் பாஸ்கர்.
“ஏன் இப்படி சொல்றீங்க? எதோ கிரா மத்துல இருக்கிற அக்காவையும், அண்ண னையும் பார்க்கணும்னு வந்தோம். இப்ப சென்னைக்கு கிளம்பறப்போ எதுக்காக கோபப்படறீங்க?” - புரியாமல் கேட்டாள் ஆனந்தி.
“உன் அக்காவும் அண்ணனும் பசங் களை எப்படி வளர்த்திருக்காங்க பார்த் தியா?” -சிடுசிடுப்பாய்க் கேட்டான் பாஸ்கர்.
“ஏன்... நல்லாத்தானே வளர்த்திருக் காங்க?”
“நீதான் மெச்சிக்கணும். ஒண்ணு, ‘சித்தப்பா எனக்கு பொம்மை வாங்கிக் குடு’ன்னு சொல்லுது. இன்னொண்ணு, ‘அத்தை எனக்கு சாக்லெட் வாங்கிக் குடு’ன்னு சொல்லுது. நாகரிகமும் தெரியல, மரியாதையும் தெரியல. வெளியூர்லயிருந்து வந்தவங்களை மரியாதையா வாங்க போங்கன்னு கூப்பிடணும்னு சொல்லிக் கொடுக்கலையா? இப்படியா அதை வாங் கிக் கொடு, இதை வாங்கிக் கொடுன்னு கேட் பாங்க? அவங்க நடந்துக்கிறதைப் பார்த்து நம்ம ராகேஷுக்கும் ஆருஷிக்கும் அதே பழக்கம்தான் வரும்....” என்றான் பாஸ்கர்.
“இங்க பாருங்க... கிராமத்துல நெருங்கிய சொந்தமா இருந்தா, வயசானவங்களையும் வா, போன்னு கூப்பிடுறது சாதாரணம்ங்க. நம்ம ராகேஷும் ஆருஷியும் மரியாதையா பேசுறாங்கன்னு சொல்றீங்களே. ஒருமுறை யாவது அக்காவை பெரியம்மான்னு கூப்பிட் டாங்களா? என் அண்ணனை மாமான்னு கூப்பிட்டாங்களா? ஏதோ மூணாவது மனுசங்களைக் கூப்பிடுறது மாதிரி ஆமாங்க, இல்லைங்கன்னு பேசுறாங்க.
ஆனா அந்தப் பசங்க பேச்சுக்கு ஒருமுறை சித்தப்பா, சித்தி, அத்தை, மாமான்னு வாய்நிறைய கூப்பிட்டாங்களே! உரிமையா அது வாங்கிக் கொடு, இதுவாங்கிக் கொடுன்னு கேட்டாங்களே! நாகரிகமும் மரியாதையும் போகப்போக வந்துடுங்க. ஆனா சொந்தம், உறவுமுறை எல்லாம் வராது. அந்த வகையில அக்காவும், அண்ணனும் பிள்ளைகளை சரியாத்தான் வளர்த்திருக்காங்க. நாகரிகம் நாகரிகம்னு நாமதான் போலியா வளர்த்திருக்கோம். அவங்ககிட்டேயிருந்துதான் நம்ம குழந்தைங்க நிறைய கத்துக்கணும்.”
ஆனந்தி சொல்லி முடிக்கையில், பாஸ்கருக்கு பலப்பல உண்மைகள் புரிவது போலிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT