Published : 01 Jul 2015 12:08 PM
Last Updated : 01 Jul 2015 12:08 PM
‘இனிமை பலகாரக்கடை’ என்றால் ஊரில் பிரபலம். காரணம், அதன் உரிமையாளர் பிரகாசம்தான். குடும்பத்தில் வறுமை காரணமாக பள்ளியோடு படிப்பை நிறுத்தி விட்டு, தன் சுய முயற்சியால் முதலில் வடை சுட்டு விற்றார். பின் அதன் மூலம் கிடைத்த முதலீட்டை வைத்து சிறிய அளவில் ஒரு பலகாரக் கடை ஆரம்பித்தார். இன்று ஊரில் பிரபல மான தொழிலதிபர்களில் பிரகாசமும் ஒருவர். வாடிக்கையாளர்களின் தேவை அதிகமாகவே தன் கடைக்கு இன்னொரு கிளையை ஆரம்பிக்க யோசித்தார்.
பிரகாசம் தனது புதிய கிளைக்கு ஊரில் தகுந்த இடம் தேடிக்கொண் டிருந்தார். அவரது உதவியாளர் குமார் இரண்டு இடங்களை தேர்ந்தெடுத்து கூறினார். அதில் பிரகாசம் ஒரு இடத்தை தேர்வு செய்தார்.
குமார், “சார், இங்க ஏற்கனவே ரெண்டு பெரிய பலகார கடைகள் இருக்கு...” என்று தயங்கினார்.
“எனக்கு தெரியும்” என்றார் பிரகாசம் சிரித்துக்கொண்டே.
“அங்கே ஏற்கெனவே போட்டி, பொறாமை இருக்கும் . பின்ன எதுக்கு அந்த இடத்தை தேர்ந்தெடுத்தீங்க?” என்றார் உதவியாளர்.
“குமார்.. ஓட்டப்பந்தயத்துல குறைஞ்சது ரெண்டு பேர் ஓடுனாத் தான் ஜெயிக்கணும்னு ஒரு உத் வேகம் இருக்கும். நாம இந்த அளவு வளர்ந்திருக்கோம்னா, அதுக்கு தூண்டுகோல் போட்டிதான். போட்டி இல்லைன்னா யாருக்குமே ஜெயிக் கணும்கிற வெறி வராது. ஏற்கெனவே ரெண்டு கடை இருக்குற இடத்துல கடை ஆரம்பிச்சோம்னா, அவங் களுக்கும் சரி, நமக்கும் சரி போட்டி யில ஜெயிக்கணும்னு தரமான பொருளா, மக்களுக்கு ஏத்த விலை யில தரணும்னு தோணும்” என்றார் அமைதியாக. தன் முதலாளியின் தொழில் சூட்சுமத்தை உணர்ந்து கொண்டார் குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT