Last Updated : 12 Jun, 2015 07:34 PM

 

Published : 12 Jun 2015 07:34 PM
Last Updated : 12 Jun 2015 07:34 PM

ட்வீட்டாம்லேட்: ஃபேக்-ஐடியாளர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

சமூக வலைதளங்களில் அசல் முகத்தைக் காட்டி கருத்து சொல்வதை விரும்பாதவர்கள் ஃபேக் ஐடியாளர்களாக உருவெடுத்து கருத்துகளைத் தெறிப்பது வழக்கம். பல நேரங்களில் இதில் விபரீதம் ஏற்படுவதும் உண்டு. ஆனாலும், வலைஞர்கள் மத்தியில் ஃபேக் ஐடிக்களுக்கு என்றுமே வரவேற்பு இருக்கவே செய்கிறது.

ஃபேக் ஐடியாளர்களுடன் நட்பு பாராட்டுவது, புரளி பேசுவது, கருத்துப் பகிர்வது என பல சமயங்களில் விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் சில சமயங்களில் அறிவுபூர்வமாகவும் கலந்துரையாடல்கள் நடப்பதுண்டு.

சரி அப்படி என்னதான் இந்த ஃபேக்ஐடியாளர்கள் செய்வார்கள். என்ன கருத்தாக்கங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களது நோக்கம்தான் என்ன என்பதை இன்றைய ட்வீட்டாம்லேட் மூலம் அறிய முற்படுவோம்...

வருங்கால பிரதமர் ‏@akkapporu - பார்த்த உடனே ஃபேக் ஐடிகளை இனம் காண வரம் கொடு இறைவா...

ஸ்டைல் பாண்டி ‏@stylepaandi - சேம் டயலாக்.. பாரபட்சம் பாக்காம பேசுது "நான் ஒன்னும் ஃபேக் ஐடி இல்ல, ஒரிஜினல் ஐடி தான். நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க எனக்கென்ன"

பாலா ‏@baamaran - கோதாவரி என்ற பேர்ல ஃபேக்ஐடி கிரியேட் பண்லாம்னு இருக்கேன் #எனி கமெண்ட்ஸ் #இப்டியாவது 1000 Rt எட்டலாம்ல.

ATHISHA 2:11:11 ‏@athisha - பெண்கள் பெயரில் ஃபேக்ஐடி வைத்திருக்கிற ஆம்பள பசங்க புரொபைல் பிக்சர்லாம் எங்கிருந்து எடுப்பானுங்கனு தெர்ல ஒவ்வொன்னும் செம!

காக்கைச் சித்தர் ‏@vandavaalam - போலி என்பார் ஃபேக் ஐடி என்பார் மற்றாங்கே, ஜாலியா வாழத்தெரியா தவர்.

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - ட்விட்டர்ல நான் வியப்பது என்னன்னா தன் ட்வீட் போட்ட அடுத்த 2-வது செகன்டே ஃபேக் ஐடி ல தன் ட்வீட்டயே RT பண்ற ஸ்பீடுதான்.

காட்டுப்பயல் ‏@sundartsp - அமெரிக்காவில் பல லட்சம் செலவு செஞ்சு பெண்ணா மாறியிருக்கான். இங்கே ஐந்து நிமிடம் போதுமே ஃபேக் ஐடி ரெடி பண்ண.

ட்விட்டர் ரஜினி ‏@ss_athish - ஃபேக் ஐடி ஒரிஜினல் ஐடினு பார்த்து பேசி லவ் பண்ணி கல்யாணமா பண்ண போறோம்? வந்தமா கருத்து சொன்னமா கலாய்ச்சமா கடலை போட்டமானு போயிட்டே இருக்கனும்.

மித்ரா ‏@im_mithra - அந்த ஃபேக்ஐடி யாரோடதா இருக்கும். ரைட்டு இதுவும் அந்த மரிக்கொழுந்து சென்ட்டு போடுறவனாதான் இருக்கும் ;-/

Gemini ‏@K2_b_ - தான் அல்லாத ஒரு பாத்திரமாக, (பெரும்பாலும் ஆண்களால்) எதிர் பாலினத்தவர் பெயரில், அனைவரையும் முட்டாள் ஆக்கவே உருவாக்கப் படுவது #ஃபேக்ஐடி

சிறுவன்© ‏@chiruvan - ஏசப்பா, இந்த சமூகவலைதளங்கல்ல உள்ள ஃபேக் ஐடிகளை கண்டுபிடிக்க ஒரு புது ஜெம்ஸ்பாண்ட்007 அனுப்பிவைப்பா.!

ஏசு: என் பெருலயே 4ஐடி இருக்கு பக்தா.

இளநி வியாபாரி ‏@MrElani - அப்போ நீங்க ஃபேக்ஐடி கிடையாதா ? இவ்ளோ நாளா நான் அப்டித்தான் நினைச்சிட்டுருந்தே..அவ்வ்வ்வ்

கில்லி ‏@iGhillli - ஃபேக் ஐடிக்களை அப்பவே அவ்வை சண்முகி மூலமா அங்கிகரித்திருக்கிறார் பத்மபுஷணார்..

காக்கைச் சித்தர் ‏@vandavaalam - ஈன்ற பொழுதினும் பெரிது, ஃபேக் ஐடியின் ட்வீட்கள் ரீட்வீட்டென கேட்ட ஒரிஜினல்.

தூர தேசத்து கழுகு ‏@tamil_eagle - பெண்கள் ஐடிக்கே மென்சனும் ஃபாலோயர்ஸும் அதிகமாக வருவதால், இதுவே ஃபேக் ஐடி உருவாக காரணம் என்று பட்சி சொல்லுது.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - ஏம்மா ஃபேக்ஐடி மைக்கை அந்தக் கனல் கிட்டக் குடு! சொல்லுப்பா உனக்கு இந்த சமுதாயத்து மேல எண்ணக் கோவம்? ஏன் இத்தனை ஐடி?அதுல பொண்ணுப் பேர்ல 4!

Saba ‏@Mayavi - ட்வீட்டர்ல ஒரு பொண்ணு கூட தனியா நடந்திரலாம், ஆனா ஒரு ஃபேக்ஐடி தனியா நடக்கமுடியாது !!!!

நோபிட்டா ‏@iRaVuSu - தாங்கள கார்த்தி - ஜெஸ்ஸி ரேஞ்சிக்கி நினைச்சிட்டு கடலை போடுறாங்க! அது கடசில அமுதன் - இளமாறனா தான் இருக்கும் #fakeid

உறங்காத விழிகள் ‏@Writer_Twits - X: நீங்க ஃபேக்ஐடி-யா? மீ: ஆமா எப்படி கண்டுபிடிச்சிங்க. X : என் போட்டவ புரொபைல் பிக்ச்சரா வெச்சு இருக்கீங்களே அதான். மீ: ஙே!!!

மதுமதன் ‏@mathan_dgl - மொக்க ட்வீட்டுகளும் ஃபேக்ஐடி போட்டால் இங்கு கவனிக்கப்படுகிறது.

செந்தில் ஜி ‏@senthilgs81 - மூட நம்பிக்கை என்பது, நாம சேட் பன்றது ஃபேக் ஐடி இல்லனு நம்புவது.

நோபிட்டா ‏@iRaVuSu - ஒரு ஃபேக்ஐடி அதனுடைய ஒரிஜினல் ஐடியை ப்ளாக் பண்ண சொல்லி ட்வீட் போடுது. எங்கசார்போகுது இந்த #ட்விட்டர் உலகம்.

முகிலன் ‏@Amirdee - இந்த ஃபேக்ஐடி திரியை கொளுத்திப்போட்ட ஆளு மொதல்ல ஒரிஜினல் தானா.

Nívєthα ‏@niviie - இப்படி ஃபேக் ஐடி ஆரம்பிச்சு, உங்க டேட்டாகார்டு டைம் எல்லாத்தையும் தண்டமா வீணாக்குங்க உங்களலாம் எத்தனை விஷ்வா பாய் வந்தாலும் திருத்த முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x