Published : 07 May 2015 05:17 PM
Last Updated : 07 May 2015 05:17 PM

ட்வீட்டாம்லேட்: பிளஸ் 2 ரிசல்டும் இழந்த ஒலிம்பிக் மெடலும்!

தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

வழக்கம் போல இணையவாசிகள் இன்றும் தேர்வுகளைப் பற்றிய நினைவலைகளையும், மாநில அளவில் தேர்ச்சி அடைந்தவர்களைப் பற்றியும் எழுதித் தீர்த்துவிட்டனர். அந்தக் காலத்தில் வெளியான தேர்வு முடிவுகளைப் பற்றியும், மதிப்பெண்கள் குறித்த ட்விட்டர் வாசிகளின் பதிவுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

இளநி வியாபாரி ‏@MrElani - 850 மார்க் எடுத்த ஒரு பிரில்லியண்ட ரிசல்ட் அன்னிக்கி எள்ளு மூட்டைய சைக்கிள்ள கட்டிவிட்டு எண்ணெய் ஆட்டிட்டு வர ரோட்டரிக்கு அனுப்பின உலகம் சார் இது

தல" போயட்டு ‏@LathaMagan - நம்பர மெசேஜ் பண்ணா லைவ் ரிசல்ட். லோக்கல் சேனல் ராக்ஸ். #நெல்லைடா

யுவன் தாந்தோணி ‏@thanDhoniRule - என்னுடைய 12 ரிசல்ட் போது நான் இண்டர்நெட் செண்டருக்கு போனேன். ஆனா எங்க அம்மா பிள்ளையார் கோவிலுக்கு போனாங்க, generation gap எப்போதும் தொடரும்.

Neethi ‏@neethi_civil - பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை -செய்தி சரஸ்வதி தேவி பசங்க பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறா #பெண்ணாதிக்க சண்முகம்

புதுவை குடிமகன் ‏@iamkudimagan - +2 ரிசல்ட் என் வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்; எங்க அப்பா வெளக்குமாத்த எடுத்து தெருத்தெருவா தொரத்துன நாள்

தேனடை ‏@Tamilachi100 - 10th ரிசல்ட் என்பது லீக் மேட்ச்.. +2 ரிசல்ட் காலிறுதி.. காலேஜ் செமஸ்டர் ரிசல்ட் என்பது அரையிறுதி.. காலேஜ் முடிச்ச அப்புறம் இறுதிப் போட்டி..

சிறுத்தை™ ‏@SaThi_Ya_PrIyAn - மாலைமலர்லயும் அடுத்த நாள் தினத்தந்திலையும் ரிசல்ட் பாத்த டென்சன் இந்த தலைமுறைக்கு இல்ல #சோறு தண்ணி எறங்காம தவிச்சோம்

SELVA ‏@joe_selva1 - நான்லாம் ரிசல்ட் பார்த்து பயப்படுற ஒரே விஷயம்- டிவில முதல்மார்க் வாங்குனவன் கொடுக்கிற பில்டப்ப தாங்க முடியாது

பிரகாஷ் @kongu - டீச்சர்ஸ், ப்ரின்சிபால், அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. டாக்டராகி சேவை செய்வதே லட்சியம் #ப்ளஸ் டூ ரிசல்ட்

Jeba ‏@jebz4 - ப்ளஸ் 2 ரிஸல்ட் ஒன்றுக்காக பல ஒலிம்பிக் மெடல்களை தியாகம் செய்த நாடுதான் நம் நாடு

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா ‏@Ulaganandha - +2 ரிசல்ட்.. பசங்க மானத்த காப்பாத்த ஒருத்தன் பொறந்துருப்பான்!

நாகராஜசோழன் ‏@kandaknd - தேர்தல் நேர வாக்குறுதிகளுக்கு சற்றும் குறைவில்லாதது +2 ரிசல்ட் வந்தவுடன் டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என்னும் மாணவனின் வாக்குறுதி

மொக்க என்ஜினியர் ‏@sachin_purusho - ஆண் பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும், பையன் உம்முனு இருந்தா ரிசல்ட் வந்துருக்கனுமென்று :P

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - தேர்வு முடிவுகள் வந்த நாளன்று, அம்மாவின் கரங்களில் இருந்ததை விட அரவணைப்பையும், பாதுகாப்பையும், அப்பாவின் கரங்களில் உணர்ந்தவர்கள் அதிகம்.

Satheesh Kumar ‏@saysatheesh - இந்த வருஷமாவது தேர்வு தோல்வி தற்கொலை செய்தி வராம இருக்கணும் (வந்தாலும் அது 'அம்மா முதல்வராக'னு மாத்திருவாங்க!)

மஹான் அன்பு ‏@AnbarasuRK - இந்த வருஷத்தோட பெஸ்ட் ஜெராக்ஸ் மெசின் யாருன்னு தெரிய போகுது. #+2Results

PriyaKathiravan ‏@priyakathiravan - இப்ப நான் நெனைக்கறதெல்லாம் ஒன்னே ஒண்ணு தான். நல்ல வேளை நான் ப்ளஸ் 2 படிக்கறப்ப ட்விட்டர் இல்ல.

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை.. # கருணை மலரா இருந்தாலும் கருணை மார்க் இல்லயாம்.

ananth kesav ‏@ananthkesav - வாழ்க்கையில ஜெயிச்சவங்களோட ரிசல்ட் எப்போபா வரும்.. ஐயாம் வெய்ட்டிங்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x