Last Updated : 14 May, 2015 09:08 AM

 

Published : 14 May 2015 09:08 AM
Last Updated : 14 May 2015 09:08 AM

இன்று அன்று | 1974 மே 14: நிலத்தடி வாழ்க்கை தினம்!

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் கேப் காட் என்ற இடத்தில் பிறந்த மால்கம் வெல்ஸ் (11.03.1926 - 27.11.2009) வித்தியாசமான மனிதர் மட்டுமல்ல; கிறுக்குத்தனமான மனிதரும்கூட. அவர் ஓர் எழுத்தாளர், விரிவுரையாளர், கேலிச்சித்திரக்காரர், கட்டுரையாளர், சூரியமின்சக்தி ஆலோசகர் அத்துடன் கட்டிடக்கலை நிபுணரும் கூட.

இந்த பூமியைப் பார்க்கும்போ தெல்லாம் அவருக்கு உறுத்திக் கொண்டே இருக்கும். இந்த இடம் தாவரங்களுக்கும் சிறுபிராணி களுக்கும் விலங்குகளுக்கும் பறவை களுக்கும் உரியது. மனிதர்கள் ஏன் இவற்றுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, அதில் வீட்டைக் கட்டிக்கொண்டு இவற்றின் வாழ் வாதாரங்களைப் பாழ்படுத்து கிறார்கள் என்று நினைப்பார். தொழிற் சாலைகள் கட்டப்படுவதை அறவே வெறுத்தார். இதற்குத் தீர்வுதான் என்ன என்று யோசித்து யோசித்து ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

அதாவது, பூமிக்கு மேலே வாழாமல் பூமிக்குக் கீழே வாழ்ந்தால் என்ன என்பதுதான் அது! இதனால் உலகுக்கு அவர் அறிவித்த கொள்கை தான் ‘நிலத்தடி வாழ்க்கை முறை’. இதை நிலவறை வாழ்க்கை முறை என்றும் சொல்லலாம்.

அவரே இப்படி ஒரு வீட்டை பூமிக் கடியில் கட்டி அதில் குடியேறி வாழ்ந்தார். தான் வாழ்ந்தது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அவ்வாறே வாழச் சொன்னார். அதற்காக ஆண்டு தோறும் மே 14-ம் தேதியை ‘அமெரிக்க நிலத்தடி வாழ்க்கை தினமாக’ கொண்டாடுகின்றனர். அவர் சொன்னதில் நியாயம் இருப்ப தாகக் கருதிய சுமார் 6,000 பேர் அவரைப் போலவே வீட்டைத் தரை மட்டத்துக்கும் கீழே கட்டிக்கொண்டு வசிக்க ஆரம்பித்தனர். 1974-ல் இது இயக்கமாகவே தொடங்கியது.

இப்படி நிலத்தடியில் வீடு கட்ட முடியாவிட்டால் என்ன செய்வது? அல்லது மே 14-ல் ஆண்டுதோறும் என்ன செய்ய வேண்டும்? பெரிய பள்ளம் தோண்டி அதில் உங்கள் வீட்டைப் புதைத்து மண்ணால் மூடி விடுங்கள். உங்கள் வீட்டுப் புழுதியை எடுத்து தபால் மூலம் வேறொரு வருக்கு அனுப்பி வையுங்கள். பூமிக் கடியில் வாழும் எலி, நண்டு, முள்ளம்பன்றி போன்றவற்றை உடன் பிறப்பாக நினைத்துக்கொள்ளுங்கள். வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டு, தரைமீது கட்டப்பட்ட உங்கள் வீட்டுக் கூரை மீது கொஞ்சம் புழுதியை எடுத்துப் பரப்புங்கள். நிலவறையின் சுவரையாவது விரலால் தொடுங்கள். பூமிக்கடியில் விளையும் முள்ளங்கி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். வீட்டுப் புழக்கடையில் சுரங்கம் தோண்டுங்கள் (சொந்த வீடாக இருந்தால்).

குறைந்தபட்சம் சுரங்கப் பாதையிலாவது இறங்கி நடங்கள். விலையுயர்ந்த எதையாவது பூமியில் புதைத்து வையுங்கள். ஏதாவதொரு குகையில் 11 நாட்களைக் கழியுங்கள். பூமிக்கு அடியில் குடியிருப்புகள், வணிக வளாகம், திரையரங்குகள், ஹோட்டல்களைக் கட்டுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பூமி மட்டத்துக்கு மேலே வீடு கட்டுவ தாகவும் கற்பனை செய்யுங்கள் - ஆனால் கட்டாதீர்கள் என்கிறார் மால்கம் வெல்ஸ். இப்படிப்பட்ட மனிதர்களைக் கொண்டிருப்பதால்தான் உலகம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x