Published : 15 May 2015 04:20 PM
Last Updated : 15 May 2015 04:20 PM
ஆட்சியில் இருக்கும்போதும் இல்லாதபோதும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் தலைவர்களில் முதன்மை வகிப்பவர் கருணாநிதி. சமூக ஊடகங்களிலும் இதே நிலைதான் என்பது அவ்வப்போது கண்கூடாகப் பார்க்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இன்று >#WhyILikeMK என்ற ஹேஷ்டேக்கில் கொட்டப்பட்ட நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள். அவற்றில் சில...
தம்பியான் @k_for_krish - என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்ற வார்த்தை இவரை தவிர யார் சொன்னாலும் அவ்வளவு உயிர்ப்போடு இருக்காது. #whyilikemk
புகழ் @mekalapugazh - தமிழறிவு, வள்ளுவன் புகழ், உயர்த்திப்பிடிக்கும் குணம், குறளோவியம், பராசக்தி, எழுத்தாளராய் ஒரு அரசியல் தலைவர், அசாத்திய ஞாபகத் திறன், பேச்சாற்றல், பெரியார்...அண்ணா...வரிசையில் கடைசித் தலைவர்....#WhyILikeMK
அழகிய தமிழ் மகன் @kaviintamizh - சுயநலத்தையே பொது நலம் என பிறரை நம்பவைக்கும் திறமை தான். #WhyILikeMK
சீனிவாசன் @yendrumdravidan - தங்களை திருநங்கை என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அந்த இனமே விரும்பும்படியாக, திருநங்கை என்ற பெயர் வைத்தார்... உழவர் சந்தை, உள்கட்டமைப்பு #WhyILikeMK.
சுரேஷ் சந்திரன் @sureshrcs - ஒரு கேள்விக்கு இரு அர்த்தமுள்ள பதில் தரும், இவர் போல் ஒரு தலைவன் தமிழகத்திற்கு இனி கிடைக்க போவதில்லை #WhyILikeMK
Sri Sri Sri Sri Ravi @senthazalravi - #WhyILikeMK திருநங்கை. மாற்றுத்திறனாளி. கைம்பெண். வார்த்தைகளை அரசு ஆணைகளாக்கி உணர்வுகளை சட்டமாக்கியவர். தனிவாரியம் தந்தவர்.
Selva/வினையூக்கி @vinaiooki - அவரின் ஆட்சிக்காலத்தில் கூட #WhyIhateMK என்று பக்கம் பக்கமாய் கட்டுரை எழுத சுதந்திரமுண்டு.
நர்சிம் @narsimp - ஒரு ட்விட்டில் சொல்லிவிடக்கூடியவையா? #WhyILikeMK.
ட்விட்டர்MGR @RavikumarMGR - எரிச்சல் தரும் கேள்விக்கும் எகத்தாளமாய் பதில் தரும் டைமிங் சென்ஸ்!#WhyILikeMK.
சௌம்யா @arattaigirl - அந்தக் குரல் #WhyILikeMK.
திரு @thirumarant - முதல் முறை முதல்வர் ஆகப்போவது போல் இன்னும் அந்த நாற்காலி மேல் அதே ஈர்ப்புடன் இருப்பதால்... #WhyILikeMK.
நாட்டுப்புறத்தான் @naatupurathan - 90+ வயசுலயும் அசராமல் விளையாடும் அவரின் தமிழ் ஆளுமை...!! #WhyILikeMK.
மாஸ் சேட்டு @SettuOfficial - ADMK உருவாகவும், DMK அழியவும் கருணாநிதி மட்டுமே காரணம்.. #whyilikeMK..
த.கணேசன் @imdganesan - அண்ணா நூற்றாண்டு நூலகம் #whyilikemk.
ஆழ்வார்க்கடியான் @Tamilblr - தமிழுக்கு சிலை, தமிழன் உயிருக்கு உலை #WhyILikeMK.
Ashraf @_Ash_raf 2 - தமிழகத்துக்கு 108-ஐ அறிமுகப்படுத்தியதால் #WhyILikeMK.
விஜய் @toviji 2 - பள்ளிக் கல்வியை தாண்டாது பல சங்க இலக்கியங்களை படைத்ததால் #WhyILikeMK.
ஆல்தோட்டபூபதி @thoatta - கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்ததால் #WhyILikeMK & ஒரு மணி நேர உண்ணாவிரதம் #WhyIhateMK.
பிராக்கு பார்ப்பவன் @suganthanp - குடும்பத்துக்கு முக்கியத்துவம் தந்ததால் #WhyILikeMK.
ட்விட்டர்MGR @RavikumarMGR - கலாய்க்கலாம்னு ஆரம்பிச்ச டேக் போல! ஆனா பாராட்டுறது தான் ரொம்ப இருக்கு!#WhyILikeMK.
செல்va @imw84u - #WhyIlikeMK இதுல இருக்க ட்வீட் & ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்தா கருணாநிதியை புகழ்ரானுங்களா இல்ல கலாய்குரானுங்களானே தெரியல.
நிலாவன் @nilaavan: பேச்சுக்காகவே கூடும் கூட்டம்; அதைக் கட்டிப்போடும் லாவகம்... #WhyILikeMK
Selva Prasad @selvaprasad_vs: மல்டி நேஷனல் கம்பெனிகள் சென்னைக்கு வருவதற்கும்... 5 லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும் காரணமாய் இருந்தவர்... #WhyILikeMK
CrAzY boy THANUSH @CrAzYboyTHANUSH: மிகச் சிறந்த தலைவர் என்பதைவிட... மிகச் சிறந்த தந்தை... #WhyILikeMK
ஃபேஸ்புக்கில்...
Thadagam Mugund: ஏன்னா அவரு கலைஞர் #WhyIlikeMK
Rajarajan RJ: நான் ஆறாம் வகுப்பு படித்த போது, எட்டாம் வகுப்பு வரை இலவச பஸ் பாஸ் அறிவித்தார். எட்டாம் வகுப்பு போன போது, அது 12 வகுப்பு வரை நீட்டிக்கபட்டது! #WhyILikeMK
பிரபல எழுத்தாளர்: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என எழவு வீட்டிலும் எதுகை மோனையில் விளையாடிய முத்தமிழே!. #WhyILikeMK
இலக்கியம் படிக்காதவன்: ஆபிஸ் அரசியலையே நம்மால தாக்கு பிடிக்க முடிய மாட்டேங்குது. இந்த வயசுலையும் தலைவரு அரசியல் பண்ணுற விதத்தை பார்த்தா ஆச்சரியமாத் தான் இருக்கு #whyILikeMK
Kirthika Tharan: இந்தியக் கலாச்சாரத்தில் குடும்பம் எவ்ளோ முக்கியம் என்று உணர்த்தியதால்.. #whyilikemk
கவிப்பேரரசு. நாஞ்சில்: என்னய்யா எல்லாரும் #WhyILikeMKன்னு கிளம்பிட்டீங்க? சரி நானும் சொல்லிக்கறேன்... என்னதான் கலாய்ச்சாலும் கழுவி ஊத்துனாலும், கிட்டத்தட்ட அறுபது வருஷமா, தமிழக அரசியலின் தவிர்க்கவே முடியாத முகமாக இருப்பதால் #WhyILikeMK...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT