Last Updated : 01 Apr, 2015 01:41 PM

 

Published : 01 Apr 2015 01:41 PM
Last Updated : 01 Apr 2015 01:41 PM

ட்வீட்டாம்லேட்: ஏப்.1-ல் மோடி, ராகுல், கொம்பன் மற்றும் சிலர்

இன்று - ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம். இந்தத் தினத்துக்கு அறிமுகம் தேவை இல்லை. இதுகாலம் வரை உறவு, நண்பர்களுடன் நேரில் முட்டாள்கள் தினத்தை 'அனுசரித்து' வந்த பலரும் இப்போது ஆன்லைனிலே அலப்பறை புரியத் தொடங்கிவிட்டனர்.

ஆங்கிலத்தில் #FekuDay என முட்டாள்கள் தினத்தையொட்டி பதிவுகள் இட, தமிழில் முட்டாள்கள் தினம், ஏப்ரல் 1-ஐ குறிப்பிட்டு நேரடியாகவே குறும்பதிவுகள் இடுவதை காலையிலேயே ட்வீட்டாளர்கள் தொடங்கிவிட்டனர்.

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ட்வீட்களில் சிலவற்றை இங்கே ட்வீட்டாம்லேட் வழங்குகிறது.

ட்விட்டர்MGR@RavikumarMGR - கோயிலுக்குப் போனா கோயில் பூட்டிக் கிடக்கு! #கடவுள் ஏப்ரல் ஃபூல் பண்ணிட்டார்.... :(((

சித்ரன் ரகுநாத்@raghuji - இன்றைக்கு எவையெல்லாம் ஏப்ரல் ஃபூல் என்று சொல்லிவிடுங்கள். எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது.

கதிர் ‏@Kathirru - நான்: டேய் முட்டாப்பயலே நீயெல்லாம் எந்ந வேலைக்கும் லாயக்கில்ல உனக்கெதுக்குடா நாயே மேனேஜர் போஸ்ட்

மேனேஜர் : மைன்ட் யுவர் வேர்ட்ஸ்

நான்: ஹேப்பி ஏப்ரல் ஃபூல் சார்!

பிரதாப்‏@rannjjii - காலையில 4 மணிக்கு அலாரம் வச்சேன், எந்திருச்சு பாத்தா மணி 6:30. #நம்ம மொபைல் போனே நம்மள ஏப்ரல் ஃபூல் ஆக்கிடுச்சு.

வக்கீல் வரிப்புலி பாலமுரளி க்ரிஷ்ணா‏@KutraUnarchi - பவானிசிங் வழக்கு நாளைக்கு விசாரணை வருது. ஏப்ரல் ஃபூல் சொல்லி ஒத்தி வைக்காம சீக்கிரம் தீர்ப்ப சொல்லுங்க சார், #மண்ட_காயுது

சக்தி@senthilcp - ஏப்ரல் மாதம் காங்கிரஸ் தலைவர் ஆகும் ராகுல் காந்தி #அப்டி ஆகிட்டா மக்கள் ஏப்ரல் ஃபூல். நடக்கலைன்னா ராகுல் ஏப்ரல் ஃபூல்.

கோகிலா@gokila_honey - விலைமதிப்பில்லாத உறவுகளையும் / நண்பர்களையும் முட்டாள்கள் தினம் என்ற பெயரால் காயப்படுத்தி சந்தோசப்படுபவன்தான் உணமையான முட்டாள்

நல்ல பையன் - @vsdeepak05 - ஏப்ரல் 1 அன்னிக்கு.. ஒரு பொண்ணுகிட்டயாச்சும் ஐ லவ் யூ சொல்லிடணும்., சொல்லிட்டு ஏப்ரல் ஃபூல்ன்னு கத்திடணும்...

சத்தி லிங்க்@sathii1 - ஆறுமாசத்துக்கு முன்னமே மோடிக்கு ஓட்டுபோட்டு ஏப்ரல் 'ஃ'பூல் ஆயிட்டேன்!!!

ராஜேஷ்கண்ணன்@k_rajeshkannan - ஜனவரி 1 புத்தாண்டாக மாறிய பின்னும், ஏப்-1 ஐ புத்தாண்டாக கொண்டாடிய சில ஐரோப்பிய நாடுகளை கிண்டல் செய்யும் பொருட்டு உருவானதே 'முட்டாள்கள் தினம்'

Mrs. சார்ம்ஸ்@_thara - ஏப்ரில் 1 முட்டாள்கள் தினம் ஏமாத்ரேன்'ன்னு சம்பளம் போடாம விட்றாதீங்க டா எச்சாரே!!

டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - நாட்டு மக்களுக்கு இனிய முட்டாள் தின நல்வாழ்த்துகள் என்று எந்த அரசியல் தலைவரும் அறிக்கை விடாமல் இருந்தாலே இந்த நாள் சிறப்பாக இருக்கும்!

Pragadeesh Mannai ‏@Pragadeesh_G - #Komban திரைப்படத்தை திரைக்கு வரவிடாமல் முயற்சி செய்த அந்நிய சக்திகளுக்கு "ஏப்ரல் ஃபூல்" முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்.

கிரிகாலன் ‏@girikaalan - மற்ற இடங்களில் எப்படியோ, ஆனா எங்க ஆபிஸ்ல எல்லாம் அட்வான்ஸா ஒரு மாசம் முன்னாடியே முட்டாள்கள் தினம் கொண்டாடிட்றாங்க. #அப்ரைசல்.

Kathir ‏@erode_kathir - பெட்ரோல் லிட்டருக்கு ”49 பைசா” விலை குறைப்பு # ஏப்ரல் ஃபூல் பண்ணிட்டாங்களாம்!

ட்விட்டரில் ஜெ. வழக்கு, சகாப்தம், அஜித், விஜய், 'கொம்பன், உத்தம வில்லன், வாலு ரிலீஸ்' முதலானவை முக்கிய பேசுபொருளாக இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் நீங்கள் சொல்லும் செய்தியை கருத்துப் பகுதியில் பகிரலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x