Last Updated : 09 Apr, 2015 01:10 PM

 

Published : 09 Apr 2015 01:10 PM
Last Updated : 09 Apr 2015 01:10 PM

இசை முரசு நாகூர் ஹனீபாவுக்கு ட்விட்டரில் புகழஞ்சலி

இசை முரசு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபல இஸ்லாமிய பாடகரும் திராவிட இயக்கப் பாடல்கள் பாடி புகழ் பெற்றவருமான நாகூர் ஹனீபா புதன்கிழமை இரவு காலமானார்.

தனது குரலால் அனைவரையும் கவர்ந்த நாகூர் ஹனீபாவின் மறைவுக்கு ட்விட்டர் உலகம் செலுத்தி வரும் புகழஞ்சலிகளில் சில:

அழகிய தமிழ் மகன் ‏@kaviintamizh - மதம் கடந்து அனைவராலும் ரசிக்கப்படும் பாடகர் நாகூர் ஹனீபா மரணம் என்ற செய்தி கேட்டு மனம் வருத்தமடைகிறது...

சுந்தர செல்வக்குமரன் ‏@sselvakumaran

இயல்: எழுத்துக் கலைஞர் ஜெயகாந்தன் மறைவு

இசை: இசை முரசு நாகூர் ஹனீபா மறைவு

நாடகம்: இருபது தமிழர் சதிக்கொலை

#முப்பெரும் துக்க நாள்

அண்ணாமலை ‏@indirajithguru - கடவுளே முயன்றாலும், நாகூர் ஹனீபாவின் குரலில் இன்னொருவரை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே..! #அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்....

கைப்புள்ள ‏@bojisen - மதம், கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு தன் இறைபாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நாகூர் ஹனீபா..

#RIPNagoorHanifa

நாடோடி மாம்ஸ் ‏@kkarthic - பெயரே யோசிக்கும் போதே கணீர்குரல் மனதில் ஒசையிடுகிறது "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" என்று

#RIP நாகூர் ஹனிபா

இளையபாரதி ‏@Ilayabharathii - எழுத்தாளர் ஜெயகாந்தன், பாடகர் நாகூர் ஹனீபா, மற்றும் ஒரு நாள் கூலிக்காக மரணித்த அன்னாடங்காச்சிகள் இருபது பேரின் ஆத்மாக்கள் சாந்தி கொள்ளட்டும்.

ஸ்பெசல் கேரக்ட்டர் ‏@jill_online - இல்லை என்று சொல்லாதவனிடம் சென்றுவிட்டார், நாகூர் ஹனீபா.

Iam_Sivaji ‏@imhere_ssk - சங்கத்தமிழும் (ஜெயகாந்தன்) இசைத்தமிழம் (நாகூர் ஹனீபா) ஆடி அடங்கியது .

கதிர் - ‏@Kathirru - நாகூர் ஹனீபா, ரைட்டர் ஜெயகாந்தன் இவங்க ரெண்டுபேருமே யாருன்னு எனக்கு தெரியாது... ஆனா ஏதோ சாதிச்சுருக்காங்கன்னு மட்டும் தெரியுது !!

காதல்மன்னன் ‏@Rajayogiahgtwa1 -

நாகூர் ஹனீபா!

தெளிந்த நீரோடை

கடலில் சங்கமம்!

உங்கள்

இன்னிசை

என்றும்

எங்கள் மனவானில்!!

open talk ‏@swamy662 - ஒரு தீவிர திராவிட தொண்டனும் ..ஒரு தீவிர திராவிட விமர்சகனும் ஒரே நேரத்தில் மரணித்தபோது ...மெல்ல சிரித்திருப்பானோ இறைவன் #ஹனீபா-ஜெயகாந்தன்

RAJU ‏@GOVINDARAJEN - "பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே" பாடலை எதிர்க்கட்சிகாரனையும் ரசிக்க வைத்த குரல்..நாகூர் ஹனீபா மறைவுக்கு அனுதாபங்கள்.

கில்லர் ‏@paidkiller - வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என அன்றே பாடினார் நாகூர் ஹனீபா!

தகெஷி கிடானோ ‏@IYamunai - வாழ்க்கையில் இன்றுதான் சிலர், நாகூர் ஹனீபா ரசிகர்களாகின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x