Last Updated : 16 Apr, 2015 05:55 PM

 

Published : 16 Apr 2015 05:55 PM
Last Updated : 16 Apr 2015 05:55 PM

ட்வீட்டாம்லேட்: டாஸ்மாக்கும் டாஸ்மாக் நிமித்தமும்!

அடுத்த உலகப் போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்வது அதிகரித்துள்ளது. ஆனால், அந்தத் தண்ணீருக்கும் மேலான தலையாயப் பிரச்சினையாய் தமிழர்களுக்கு 'தண்ணீ' (டாஸ்மாக்) இருப்பது வேதனைக்குரியது.

தமிழக மக்களின் மிகப் பெரிய பிரச்சினையான டாஸ்மாக்கின் வருவாயில்தான் அரசு இயங்க முடிவதாகவும் பேச்சுகள் உண்டு.

மதுப் பழக்கத்துக்கு எதிராக பல போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுப்பியாகிவிட்டது. ஒரு பக்கம் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கூறினாலும், டாஸ்மாக் இல்லாமல் வாழ்க்கை இயங்காது என்ற நிலையையே அங்கு குவியும் கூட்டம் காட்டுகிறது.

டாஸ்மாக் தொடர்பாக ட்விட்டரில் பதிவுகளைத் தேடினால், அந்தப் பதத்தை வைத்துக்கொண்டு நக்கல், நையாண்டியுடன் குறும்புப் பதிவுகள்தான் விரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கு இடையே டாஸ்மாக் விளைவுகளை அழுத்தமாகச் சுட்டிக்காட்டும் பதிவுகளும் ஏராளமாக இருக்கின்றன. #டாஸ்மாக் குறித்த பதிவுகளின் தொகுப்பு இன்றைய #ட்வீட்டாம்லேட்-டில்...

இதயம் இல்லாதவன் ‏@ganeshrajasep - குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலே நீங்கள் நடந்து வரும் தூரத்தில் டாஸ்மாக் திறந்தோம்-தமிழகஅரசு #PleaseStopAllTasmac

புதுகை அருண் ‏@AArunrangiem - விளம்பரம் ஏதுமின்றி விற்பனையில் வெற்றிபெற்ற நிறுவனம் #டாஸ்மாக்

சிந்தனைவாதி ‏@PARITHITAMIL - குடிமக்கள் என்ற வார்த்தையை தமிழ்நாடு மட்டுமே சரியாக செயல்படுத்துகிறது #டாஸ்மாக்

தன லட்சுமி ‏@DHANALA - சாதி, சமயமற்ற சமத்துவம் உலாவும் இடம்... #டாஸ்மாக்..!!

GuRu ‏@Guru_Vathiyar - மார்க் மை வேர்ட்ஸ்... டாஸ்மாக்கில் WiFi வரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நுண்மதியோன் ‏@Nunmathiyon - ரோட்டோட எல்லா கட்டிங்கும் நேரா கட்டிங்குக்குதான்டா கூட்டிட்டு போகுது.. குடிக்க வைக்காதிங்கடா #எல்லா டாஸ்மாக்கையும் மூடித்தொலைங்கடா.

MuthuRaj ‏@idiot_jk - சித்திரை1 கொண்டாட்டம் - ஊர்ல பல பிரச்சனை எல்லாத்துக்கும் ஒரே காரணம் 'மது' 'டாஸ்மாக்'. வீட்ல உள்ளவங்களை அழ வைக்கிறது தான் அரசோட சாதனையா?!

இதயம் இல்லாதவன் ‏@ganeshrajasep - டாஸ்மாக் இல்லாம சோக பாட்டு எடுங்கடா சினிமா படைப்பாளிகளா.. நாட்டுல பாதி பேர் உங்களால தான் தண்ணிஅடிச்சுட்டு திரியுறாங்க #PleaseStopAllTasmac

குழந்தை Talks ‏@maanniiiiiii - நண்பனாய் ஒரு "மனைவி" - ஆண் சொர்க்கத்தில் வாழ்வான் டாஸ்மாக்கிலேயே...

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen - இரு திராவிட கட்சிகளின் பெருந்தலைகளின் மது ஆலைகளிலிருந்து, மது கொள்முதலை டாஸ்மாக் நிறுத்தாதவரை, தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை.

மகிழ்வரசு ThePatriot ‏@Anandraaj04 - Rs.200-க்கு வோட்டு போட்டா இப்படித்தான்....கவலைப்படாதீங்க.

நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan - நேத்து ஒரு கட்சி பூரண மதுவிலக்குக்காக கண்டன பொதுக்கூட்டம் நடத்துன ஏரியாவில இருந்த டாஸ்மாக் கடைகள்ல, நேத்தே மொத்த சரக்கும் காலியாயிடுச்சாம்!

வழி தேடும் பயணி ‏@shanmubabu - தெருவுக்கு தெரு இருக்க டாஸ்மாக் கடைய ஒழிச்சிட்டு நல்ல கழிப்பறை கட்டுங்க, புண்ணியமா போகும்.

வந்தியத்தேவன் ‏@kalasal - தாலிய அறுக்கற போராட்டத்தை தான் தமிழக அரசு முன்னாடியே ஆரம்பிச்சிடிச்சே.. #டாஸ்மாக்

அழகிய தமிழ் மகன் ‏@kaviintamizh - தமிழக அரசே டாஸ்மாக் வியாபாரத்தை நம்பி தான் இருக்குனு ஒரு தமிழனே சொல்றப்ப அவமானமா தான் இருக்கு...

காரசிங்கம் ‏@v_actually - இன்னிக்கு டாஸ்மாக் இருக்கா? இல்லையானு? online செக் பண்ணி குடிக்கிறான். இந்தியா சீக்கிரமே வல்லரசு ஆயிரும்

கைப்புள்ள @bojisen - பிள்ளைகளுக்கு வழங்கும் விலையில்லா இலவச மடிக்கணினிகளை தந்தைகள் மூலம் டாஸ்மாக் வழியாக அரசே அடமான பணமாக பெற்றுகொள்வதை தடுக்க #PleaseStopAllTasmac

மு.நிஜாம் தீன் @nizamdheen10 - டாஸ்மாக்கை மூடச்சொல்லி போராட்டம் நடத்தனும் என்றாலும், ஒரு குவார்ட்டர் பாட்டிலை கொடுத்தால்தான் கூட்டம் சேரும் என்பதே இன்றைய நிலை #PleaseStopAllTasmac

ஜெபா @jebz4 - டாஸ்மாக்கை அடைக்க வேண்டும் என போராடுபவர்களை விட அடைக்க கூடாது என நினைக்கும் மனிதர்களே அதிகம் நம் நாட்டில்.

@sanraj2416 - நாளைய பிணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை - டாஸ்மாக்

இளையகாஞ்சி ‏@ilayakaanchi - தமிழகத்தில் 3000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது - செய்தி.. #இதல்லாம் காலியாக வச்சிக்கிட்டு டாஸ்மாக் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x