Published : 03 Aug 2017 06:21 PM
Last Updated : 03 Aug 2017 06:21 PM
மனிதர்களின் சகல தேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாகிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. நம் கருவிழிப் படலத்தில் இருந்து, கைரேகை வரை நம் அடையாளங்கள் அனைத்தும் அரசின் கையில் உள்ள நிலையில், அவற்றை மூன்றாம் மனிதர்களிடம் இருந்து பாதுகாப்பது முக்கியம்.
இதற்காக மத்திய அரசே ஆதார் பயனாளிகளுக்கு பிரத்யேக லிங்க்கை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நம் ஆதார் எண்ணின் தனித்த அடையாளங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுத்து, ஆதாரை லாக் செய்ய முடியும்.
ஆனால் இதற்கு உங்களின் ஆதார் எண்ணுடன், மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.
எவ்வாறு செய்வது?
1. இணையத்தில் https://resident.uidai.gov.in/biometric-lock என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
2. அதில் உங்களின் ஆதார் எண்ணை நிரப்பவும்.
3. ஆதார் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரகசிய எண்ணையும் பதிவிடவும்.
4. உடனே ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்களின் மொபைல் எண்ணுக்கு ஓர் குறுஞ்செய்தி (OTP) வரும்.
5. அதைக் குறிப்பிட்டுள்ள இடத்தில் பதிவிட்டு, லாக் என்ற பொத்தானை அழுத்தவும்.
இதன்மூலம் உங்களின் ஆதார் எண் லாக் செய்யப்பட்டு, மற்றவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருக்கும். நீங்களாக பூட்டைத் திறக்கும் வரை (அன்லாக்) ஆதார் எண்ணின் அடையாளங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், பான் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதால், ஆதார் எண்ணை லாக் செய்யும் பணியை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டியது அத்தியாவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT