Published : 08 Mar 2017 04:26 PM
Last Updated : 08 Mar 2017 04:26 PM
ஒரு பெண் எதை எதிர்பார்க்கிறாள்? பகட்டான ஆடையா, நகைகளா, வீடா, காரா, பணமா...? இவை எதையும் அல்ல. அன்புக்குரியவர்களிடம் இருந்து ஓர் அங்கீகாரத்தை, சின்ன தலையசைப்பை, புன்னகையை, செவிமடுத்தலை. இதைத்தான் இந்த குறும்படமும் சொல்கிறது.
லட்சுமி ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவி. இரு குழந்தைகளுக்குத் தாய். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், அச்சகம் ஒன்றில் அல்லாடுகிறான் கணவன்.
அவள் அணிந்திருக்கும் ஒரே நகை கம்மல்தான். அதிலும் கல் விழுந்திருக்க மாற்றித்தரச் சொல்லி கணவனிடம் கேட்கிறாள். அலுவல் பிரச்சனைகளுக்கிடையில் கணவன் கண்டுகொள்ளாமல் செல்ல, அச்சகத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. என்ன அது?
பின்னணி இசை எதுவும் கோர்க்கப்படாத சில இடங்கள், இயல்பான சத்தங்களால் கவனம் ஈர்க்கின்றன. பெண்ணின் மகத்துவம் பேசும் பாடல் வரிகள் குறும்படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.
பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவதைவிட அதை உணர்ந்த மனதுதான் பெரியது. பெண் எல்லாவற்றிலும், சிறந்தவைக்கு உரியவள். இதை உரியவர் உணர்ந்தால் போதும்; உலகம் மலரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT