Published : 11 Jun 2016 05:17 PM
Last Updated : 11 Jun 2016 05:17 PM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது. அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைந்தது. இந்த பேரணி குறித்து நெட்டிசன்கள் பகிர்ந்த உணர்வுபூர்வ பதிவுகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
விரைவில் தெறிக்கட்டும் விடுதலைக்கான விலங்குகள் ! #Release7Innocents
பேரறிவாளன் விடுதலையைக் கோரும் பயணத்தில் கலந்து கொள்வோருக்கு எனது நன்றிகளும், வாழ்த்துகளும். நியாயமான கோரிக்கைக்கான லட்சியப் போராட்டம்.
25 வருட சிறை வாழ்வுக்கு முடிவு தேடி அற்புதம்மாள் தலைமையில் பேரணி.
வாகனப் பேரணி சிறக்கட்டும் - சிறை
வாயிலின் கதவு திறக்கட்டும் - எங்கள்
அறிவு விடுதலையாகி பறக்கட்டும்.
நிரபராதிகள் எழுவர்..
நிர்க்கதியாக நாம்...
ஏற்குமா அரசு?
ஏங்குறோம் நாம்..
வாகன பேரணி
என்ன தான் அற்புதம்மாள் பேரணி நடத்தினாலும் மத்திய அரசு நிலையில் மாற்றம் இருக்காது.
25 வருட சிறை வாழ்க்கையை விட இவர்களுக்கு மேலான தண்டனை ஏதும் இருக்கமுடியாது.
அந்த ஏழுபேரும் மலையாளிகளாகவோ அல்லது வட இந்தியர்களாகவோ இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரியாக இருந்திருக்கும்!
வரலாற்று பெருமை பேசும் நம்மால் முடியாத விஷயமாக இன்றுவரை இருப்பது எழுவர் விடுதலை.
9 volt battery பில் வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டு 25 வருட சிறைக்கு பின் வழக்கு எழுதிய அதிகாரி சொல்கிறார்
நிரபராதியென்று.
பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு: இனியும் தொடரக்கூடாது சிறைக்கொடுமை. 7 தமிழர்களை விடுதலை செய்க!
>பவன் மறுக்கப்பட்ட நீதிக்கான கால் நூற்றாண்டு கால போராட்ட வரலாறு! #அற்புதம்மாள்
ஏழு தமிழர்களாக இல்லாவிடினும் ஏழு மனிதர்களாகவேனும் கருத்தில் கொள்ளுங்கள்
கால் நூற்றாண்டு கண்ணீரை துடைத்தெறிய கரம் கோர்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT