Published : 07 Jul 2016 11:48 AM
Last Updated : 07 Jul 2016 11:48 AM
நம் நாட்டு பழம்பொருட் களை வெளிநாடு களுக்குக் கடத்து வதை தடுக்கச் சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைபடுத்த வேண்டிய அதிகாரத் தலைகள் சிலரும் கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து நிற்பதால் இன்றுவரை நம் பாரம்பரியச் சின்னங் கள் சர்வ சுதந்திரமாக கடத்தப்படுகின் றன. அதை பார்ப்பதற்கு முன்பு, பழம் கலைப் பொருட்களை பாதுகாப்பத்தில் இத் தாலியின் அ ணுகு முறையை பார்க்கலாம்.
கடத்தலில் இத்தாலி சுங்கத்துறை தலைவர்
இத்தாலி சுங்கத்துறையின் முன்னாள் தலைவர் பாஸ்கல் கேமரா. இவர் 1995-ல் சாலை விபத்தில் இறக்க, விபத்து நடந்த இடத் துக்கு விரைந்த இத்தாலி போலீஸார், பாஸ் கலின் காருக்குள் ஏராளமான போலாராய்டு போட்டோக்கள் இருந்ததைக் கண்டனர். அவற்றில் சில இத்தாலியின் ரீஜினல் மியூ சியத்தில் திருடுபோன கலைப்பொருட்களின் படங்கள். போலீஸ் விசாரணையில் பல மர்மங்களுக்கு விடை கிடைத்தன.
கிரேக்கர்களின் ஆளுமைக்குள் இருந்த இத்தாலியில் ஒயின் போன்ற மது வகைகளை ஊற்றிவைக்கும் ‘கிரேட்டர்’ எனப்படும் குடுவைகள் மிகப் பிரபலம். 2 மற்றும் 3-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இக் குடுவைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கும். சில குடுவைகளில் அதில் ஓவியங்களை வரைந்த ஓவியர் யூப்ரனியஸ் கையொப்பம் இட்டிருப்பார். அந்தக் குடுவை களுக்கு மதிப்பு அதிகம். அக்குடுவையின் இன்றைய உலக மார்க்கெட் விலை 10 மில்லியன் டாலர்கள்.
இத்தாலியில் பழமையான கல்லறை களை உடைத்து அதிலுள்ள பழம் பொருட் களை திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் (Tomb Robbers) இருக்கிறது. இந்தத் திருடர்கள், தாங்களாகவே அகழ்வு செய்து கிரேட்டர் குடுவை களைக் கண்டு பிடிப்ப தும் உண்டு. அதன் உண்மைத் தன்மைக் காக குடுவைகளை அகழ்வு செய்வதில் இருந்து, அவற்றை சுத்தம் செய்வது வரை அனைத்தையும் படம் பிடிப்பார் கள். பாஸ்கலின் காரில் இருந்த புகைப்படங்கள் இது போன்றவைதான்.
‘கிரேட்டர்’ குடுவையுடன் மெடிசி
கூரியரில் குடுவைத் துண்டுகள்
குடுவைகளை அப்படியே வெளிநாடு களுக்குக் கடத்துவது சிரமம் என்பதால் அவைகளை லாவகமாக உடைத்து, துண்டு களாக்கி கூரியர் சர்வீஸ் மூலம் எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி, அங்கு போனதும் மீண்டும் அந்தத் துண்டு களை எடுத்து ஒன்றாகச் சேர்த்து ஒட்டி குடுவைகளாக்கிவிடுவார்கள். இதற்கா கவே அந்தப் குடுவைகளைப் பல்வேறு கோணங்களில் திருடர்கள் படம் எடுப்பார்கள்.
இந்த வழக்கை விசாரித்தபோது, மிகப் பழமையான மார்பிள் சிலைகளும் இத்தாலி யில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப் படுவது தெரியவந்தது. பாஸ்கலின் கைப் பேசியில் பதிவாகியிருந்த குறிப்பிட்ட 18 எண்களை போலீஸார் தொடர்புகொண்ட போது அத்தனையும் ஒரே நபரின் பெயரில், வெவ்வேறு நாடுகளில் செயல்பாட்டில் இருந்தன. பாஸ்கல் சம்பந்தப்பட்ட மேலும் சில இடங்களில் சோதனை மேற்கொண்ட இத்தாலி போலீஸ், மேலும் நூற்றுக் கணக்கான போட்டோக்களையும் கலைப் பொருட்களையும் கைப்பற்றியது.
‘கிரேட்டர்’ குடுவைகள்
பத்து மில்லியன் யூரோ அபராதம்
இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் ஜியா கோமோ மெடிசி என்ற கலைப்பொருள் டீலரை கைதுசெய்தது போலீஸ். ரோம் நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கில் 2004-ல் மெடிசிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தாலி சரித்திரத்தில் மிகப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்ட கலைப் பொருள் கடத்தல் வழக்கு இதுதான்.
பழம் பொருட்கள் கடத்தப்படுவதையும் தனியாரால் தோண்டி எடுக்கப்படுவதையும் தடுப்பதற்காக 1992-ல் ‘கராபிநிரி ஆர்ட் ஸ்குவாடு (Carabinieri Arts Squad)’ என்ற சிறப்புப் பிரிவை இத்தாலி அரசு உருவாக்கி யது. பாஸ்கல் விவகாரத்துக்குப் பிறகு இந்த அமைப்பை மேலும் வலுவாக்கியது இத் தாலி. இப்போது 3 ஆயிரம் போலீஸாரைக் கொண்டு செயல்படுகிறது இந்த அமைப்பு.
தமிழகத்தில் 1983-ல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அப் போது இப்பிரிவில் 122 போலீஸார் இருந்த னர். வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப் படும் வழக்குகளை விசாரிப்பதற்காக 1980-ல் கும்பகோணத்திலும் 1995-ல் வில்லிப்புத் தூரிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 122 பேராக இருந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எண் ணிக்கை படிப்படியாகக் கரைந்து 27 ஆனது. அதுவும் இப்போது ஒரு ஐ.ஜி., ஒரு டி.எஸ்.பி., நான்கு இன்ஸ்பெக்டர்கள், மூன்று தலைமைக் காவலர்கள் என சுருங்கிவிட்டது.
இதிலும் ஒரு காவலர் நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சையில் உள்ளார். டி.எஸ்.பி. முழுமையாக செயல்பட முடியாதவர். தொடர்ந்து பல வருடங்களாக மாற்று மதத் தைச் சேர்ந்தவர்களையே இங்கு டி.எஸ்.பி-க் களாக வைத்திருந்திருக்கிறார்கள். இங்கு பணியில் உள்ள இன்ஸ்பெக்டர்களிலும் இரண்டு பேர் போக்குவரத்துக் காவலில் இருந்தவர்கள். ஆகமொத்தம் ஒரு புறக் காவல் நிலையம் ரேஞ்சுக்குத்தான் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸின் படை பலம் இருக்கிறது. சர்வதேச அளவில் புகுந்து புறப்பட வேண்டிய இந்தப் பிரிவை முடமாக்கி வைப்பதிலும் மாபெரும் அரசியல் இருக்கிறது.
- சிலைகள் பேசும்...
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 1: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT