Published : 19 Aug 2016 09:28 AM
Last Updated : 19 Aug 2016 09:28 AM
சோழ மண்டலம்தான் சிலைக் கடத்தல் கும்பலின் முக்கி யக் கேந்திரம். சோழர் காலக் கோயில்கள் நிறைந்த இம் மண்டலத்தில் பழமையான சிலைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சிலைகள் உள்ளிட்டவைகளை ராஜேந்திர சோழன் அரண்மனை இருந்த மாளிகைமேடு பகுதி யில் திறந்தவெளியில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
கவனிப்பாரின்றி கிடக்கும் சிலைகள்
கொள்ளிடம் ஆற்றின் வடகரை யில் அருள்மொழி என்ற கிரா மத்தின் அருகே பத்தாம் நூற் றாண்டு காலத்து அம்மன் சிலை கேட்பாறின்றி விடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என் கிறார்கள் தொல்லியலாளர்கள். இதேபோல், தரங்கம்பாடிக்கும் ஆடுதுறைக்கும் இடையில் நீலவேலி என்ற இடத்தில் சிதிலமடைந்த சிவன் கோயிலிலும் கற்சிலைகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. விஜயநகரப் பேரரசு காலத்திய இந்தச் சிலை கள் 500 ஆண்டுகள் பழமை யானவை.
திருவாரூர் மாவட்டம் நாச்சி யார்கோயில் அருகே பவுத்திரீக புரம் என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது தகர்க்கப்பட்ட இந்தக் கோயில் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இங் குள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான துவாரகா - பாலகா சிலை கள் குலோத்துங்க சோழன் காலத்தில் வடிக்கப்பட் டவை. இவையும் இப் போது பாதுகாப்பற்ற நிலையில் தான் உள்ளன. இப்படி அரிய லூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சிதிலமடைந்த தொன்மையான கோயில்கள் பலவற்றில் அரிய பொக்கிஷங்களான கற் சிலைகள் கவனிப்பாறின்றி விடப்பட்டுள்ளன.
கடத்தல் அதிகரித்திருப்பது ஏன்?
40 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து உள் ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய மியூசியங்கள் இருந்தன. அதனால் அப்போது சிறிய அளவில் அதுவும் உலோகச் சிலைகள் மட்டுமே இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டன. இப் போது, பொருளாதாரத்தில் முன்னேறிய சிறிய நாடுகள் கூட தங்களது நாட்டில், பிரபல மான மியூசியங்களை உரு வாக்கி போட்டி போட்டுக் கொண்டு சிலைகளையும் கலைப் பொருட்களையும் வாங்கு கின்றன. அதேபோல். வெளிநாட்டு செல்வந்தர்களும் டாலர்களை கொட்டிக் கொடுத்து சிலைகளை விலைக்கு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், வெளிநாடுகளில் இந்தியச் சிலை களுக்கு இப்போது வரவேற்பு கூடுதல். அதனால் இப்போது கற்சிலைகளையும் அதிகமாக கடத்த ஆரம்பித் திருக்கிறார்கள்.
சரியான புரிதல் இல்லை
நமது நாட்டில் உள்ள அரிய சிலைகள் குறித்து நாம் போதிய புரிதல் இல்லாமல் இருக்கி றோம். ஆனால், வெளிநாட்டினர் அதன் முக்கியத்துவத்தையும் தொன்மையையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை கோயில் களில் உள்ள கற்சிலைகள், ஐம் பொன் சிலைகள், மரசிற்பங்கள் உள்ளிட்டவைகளை படம் எடுத்து முறைப்படி ஆவணப்படுத்தி வைக்க அறநிலையத் துறை அதிகாரிகள் யாருமே மெனக் கெட்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் பெரும் பாலான அதிகாரிகளுக்கு வரலாறு, தொன்மை மற்றும் கலை சார்ந்த புரிதல் இல் லாததுதான் என்கிறார் முனைவர் நாகஸ்வாமி.
‘‘சிலைகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தங்களது பொறுப்பை உணராததால்தான் சிலைகள் கடத்தப்படுகின்றன. மராமத்து செய்கிறோம் என்கிற பெயரில் பழைய சிலைகளைத் தூக்கி வீசிவிட்டு புதிய சிலைகளை செய்துவைக்கிறார்கள். பழசுக்கு புதுசு மாற்றுகிறார்களா அல் லது கடத்தல்காரனுக்கு வசதியாக பழசைத் தூக்கி மூலையில் போடுகிறார்களா என்று சந்தேகம் வருகிறது’’ என்று ஆதங்கப்படுகிறார் நாக ஸ்வாமி.
பதிவுச் சட்டம் என்ன சொல்கிறது?
நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைகொண்ட கலைப் பொருட் களை வைத்திருப்பவர்கள் அதை முறைப்படி பதிவுசெய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று 1972-ல் இந்திய அரசு தொல்லியல் சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. நூறாண்டு பழமையான கலைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றம் என்பதை மீண்டும் வலியுறுத்திய மத்திய அரசு, இந்தக் குற்றத்தைச் செய்வோ ருக்கு மூன்று மாதம் கடுங் காவல் ரூ.250 அபராதம் எனவும் சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.
பழமையான பொருட்களை பதிவுசெய்து சன்றிதழ் பெற் றிருந்தாலும் அவற்றை உள் நாட்டுக்குள்தான் விற்பனை செய்யமுடியும். அந்தப் பொருட் களை வாங்குபவர்கள் நான் இன்னாரிடம் இருந்து இந்தப் பொருளை வாங்கினேன் என பதிவுசெய்து புதிதாக சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பொருளை விற்றவரும் முறைப்படி தகவல் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதி காரிகள் எப்போது வந்து கேட் டாலும் அந்தப் பொருளை வாங்கியவரை விற்றவர் அடையாளம் காட்ட வேண்டும். இந்த விதிமுறைகள் எல்லாம் இப்போது பின்பற்றப்படு கின்றனவா என்பது கேள்விக்குறி தான்.
இதுகுறித்துப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி, ’’சிலைகள் உள் ளிட்ட பழமையான கலைப் பொருட்களைக் கடத்துகிறவர் களுக்கு இப்போது உள்ள தண்டனை போதாது. 5 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என நான் உட்பட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒன்பது பேர் குழுவானது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய் தோம்.
ஆனால், அப்படிச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் எங் களது தொழில் பாதிக்கப்படும் என கலைப் பொருள் வியாபாரிகள் போர்க் கொடி தூக்கினார்கள். இதன் பின்னணியில் என்ன நடந்ததோ தெரியாது. எங்களது பரிந்துரையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது மத்திய அரசு’’ என்றார்.
- சிலைகள் பேசும்..
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 31: நேர்த்தியான சுத்தமல்லி கோயில் சிலைகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT