Published : 08 Jul 2016 10:53 AM
Last Updated : 08 Jul 2016 10:53 AM
மெடிசி வழக்கில் உடைந்த மற் றும் நல்ல நிலை யில் இருந்த 3,800 பழம் கலைப் பொருட் கள், 4 ஆயிரம் புகைப்படங்கள், மெடிசி யின் வியாபாரத் தொடர்புகள் சம்பந்த மான 35 ஆயிரம் ஆவணங்கள் உள்ளிட் டவைகளை கைப்பற்றியது இத்தாலி போலீஸ். கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை இத்தாலியின் சொத்தான 7 லட்சத்து 28 ஆயிரம் பழமையான கலைப் பொருட்களைப் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்டுள்ளது இத்தாலி.
2009-ல் மட்டும் 39,384 பழமையான கலைப் பொருட்களையும் 19,043 இதரப் பொருட்களையும் மீட்டுள்ளார்கள். இதன் மதிப்பு 165 மில்லியன் யூரோ. இதே போல், 2008-ல் 183 மில்லியன் யூரோ மதிப்புக்கான பொருட்களையும் மீட்டுள்ளது இத்தாலி. நம்மவர்கள், பழிவாங்க நினைக் கும் போலீஸாரைத்தான் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இத்தாலி போலீஸார், ‘கராபிநிரி ஆர்ட் ஸ்குவாடு’ பிரிவில் பணிபுரிவதை பெருமையாகக் கருதுகிறார்கள்.
கலிபோர்னியாவில் உள்ள Paul Getty மியூசியம் தனி நபருக்குச் சொந்தமானது. உலகத்தில் வெறெந்த மியூசியத்திலும் இல்லாத அரிய பொருட்கள் தனது மியூசியத் தில் இருக்க வேண்டும் என கர்வம் கொண் டவர் அந்த மியூசியத்தின் உரிமையாளர். இந்த மியூசியத்தின் பொறுப்பாளரான மரியன் ட்ரூ என்ற பெண்மணி இத்தாலிக்குச் சொந்தமான 15 பழமையான சிலைகளை சுவிட்சர்லாந்து வழியாக அமெரிக்காவுக்குக் கொண்டுபோனார்.
இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதி யில், குற்றத்தை ஒப்புக் கொண்டு அந்தச் சிலை கள் அனைத்தையும் இத்தாலியிடம் திருப்பி ஒப்படைத்தார் மரியன் ட்ரூ. இப்படி தொடர்ச்சியாக முயற்சித்து, கடத்தல் புள்ளிகளின் நெட்வொர்க்கை கண்ணிவெடி வைத்துத் தகர்த்து வருகிறது இத்தாலி போலீஸ்.
விழா எடுக்கும் போலீஸார்
தங்கள் நாட்டு பழம் கலைப் பொருட் கள் சம்பந்தப்பட்ட புகைப்பட ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது இத்தாலி. ஆனால், சர்வதேச ஆர்ட் டீலர்கள் எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் அதை இதுவரை இத்தாலி வெளியிடவில்லை. அதேசமயம், எந்த நாட்டிலாவது தங்களது கலைப் பொக்கிஷம் இருப்பதாகத் தெரியவந்தால் உரிய ஆவணங்களோடு சென்று மீடியாக்கள் முன்னிலையில் அவற்றை அதிரடியாக மீட்கும் இத்தாலி போலீஸார், கைப்பற்றிய கலைப் பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று விழாவே எடுக்கிறார்கள்.
'March Celebration Of Asian Art' - சர்வ தேச அளவில் பழம் கலைப் பொருட்கள் வர்த்தகத்தில் இருப்பவர்கள் விரும்பிக் கொண்டாடும் கலைத் திருவிழா. ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இந்தத் திருவிழாவில் சர்வதேச கலைப் பொருள் வியாபாரிகள் தங்களிடம் உள்ள பொருட்களை விற்க பிரம்மாண்ட அரங்குகளை அமைப்பார்கள்; கோடிகளில் வர்த்தகம் களைகட்டும். இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த அந்தத் திருவிழாவில் கடத்தல் புள்ளிகளுக்கு மரண அடி கொடுத்தது அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ்.
இந்தத் திருவிழாவில் கடத்தல் பொருட்களும் சந்தைக்கு வரும் என்பது தெரிந்திருந்தாலும் இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. ஆனால் இந்த ஆண்டு, முதல்முறையாக ஒரே வாரத்தில் ஆறு முறை சோதனை நடத்திய ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார், பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமான 10 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு 20 மில்லியன் டாலர்கள். இதில் தமிழகத்தின் சொத்தும் அடக்கம்.
புத்தர் பாதத்தின் மதிப்பு
பாகிஸ்தானுக்குச் சொந்தமான புத்தர் பாதம் கல் சிற்பமும் இந்த சோதனையில் சிக்கியது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் பாதத்தின் மதிப்பு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகம். பாகிஸ்தானின் ‘ஸ்வாட் வேலி’ என்ற இடத்தில் இருந்து 1982-ல் இது கடத்தப்பட்டது. பல கைகள் மாறி கடைசியில், டோக்கியோவைச் சேர்ந்த ‘டையோ லிமிடெட்’ என்ற ஆர்ட் கேலரியின் உரிமையாளர் டாட்சுஸோ ககூவின் கைக்குப் போனது. ககூ அதை இந்த ஆண்டு ஏசியன் ஆர்ட் கலைத் திருவிழாவில் விற்பனைக்கு வைத்தார்.
இதைக் கண்டுபிடித்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார், புத்தர் பாதத்தை கைப்பற்றி டாட்சுஸோ ககூவையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். இந்தத் தகவல்களை அறிந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நான்கே வாரத்தில் புத்தர் பாதத்துக்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதை மீட்டு தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இஸ்லாமிய நாடாக இருந்தபோதும், புத்தர் பாதத்தை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசு, இலங்கையில் இருந்து புத்தத் துறவிகளை அழைத்துவந்து புத்தர் பாதத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விழாவே எடுத்திருக்கிறது. ஆனால் நாம்..?
- சிலைகள் பேசும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT