Published : 27 Jul 2016 10:22 AM
Last Updated : 27 Jul 2016 10:22 AM
பல்லவர், சோழர், பாண்டி யர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை என தமிழகத்தின் சிலைகளை வகைப்படுத்துகிறார்கள். இதில் பல்லவர் காலத்து சிலைகள்தான் அதிக விலை யில் மதிப்பிடப்படுகிறது. தொன்மையையும் வேலைப்பாடு களையும் வைத்தே சிலைகளின் விலையை நிர்ணயம் செய்கிறார் கள். சோழர் காலத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டில் இருந்து 11-ம் நூற்றாண்டு வரையில்தான் ஐம்பொன் சிலைகள் அதிக அளவில் வடிக்கப்பட்டன. இந்தச் சிலைகளுக்குத்தான் இப்போது கடத்தல் சந்தையில் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.
ஐம்பொன் சிலைகள் ஆண்டுக் கணக்கில் மண்ணுக்குள் புதைந் திருந்தால் அவைகளின் மீது பச்சை நிறத்தில் ஒரு படிமானம் (Patina) படிந்திருக்கும். இந்த படிமானத்தின் அளவைப் பொறுத் தும் சிலைகளுக்கு விலை மதிப் பிடப்படுகிறது. சுபாஷ் சந்திர கபூரின் கூட்டாளியான லண்டன் கொல்லர், சிலைகளில் செயற்கை யாக (Artificial Patina) பச்சை படிமத்தை படியவைப்பதில் கெட்டிக்காரர். இயற்கையான படிமானம் சிலைகளைப் பாது காக்கும். ஆனால் செயற்கைப் பூச்சு சிலைகளை அரித்து விடும் என்கிறார்கள். தமிழ கம் திரும்பியிருக்கும் புரந்தான் நடராஜர் சிலை உள்ளிட்டவைகளில் பூசப்பட்டுள்ள செயற்கை படிமானத்தை உடனடியாக அகற்றாவிட்டால் சிலைகளுக்கு ஆபத்து என்கிறார்கள்.
சுவிஸ் வங்கியில் கள்ளப் பணத்தை பதுக்கி வைத்திருப் பதைத்தான் நாம் இதுவரை பிர மாதமாக பேசிக் கொண்டிருக் கிறோம். ஆனால், சுவிட்ஸர்லாந் தில் இன்னொரு வகையான பதுக்கலும் நடைபெறுகிறது. சுவிட்ஸர்லாந்து அரசாங்கமானது ஜெனிவா துறைமுகத்தில் ‘ஃப்ரீபோர்ட் (Freeport)' ஒன்றை வைத்திருக்கிறது. இங்கே, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ‘க்ளை மேட்டிக் கண்ட்ரோல்’ கிடங்குகள் ஏராளம் உள்ளன. சர்வதேசப் பதுக்கல் புள்ளிகள் பலரும் இந்தக் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
கருப்புப் பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்புப் பணத் தைக் கொண்டு உலகச் சந்தையில் விலை மதிப்பு மிக்க பழமையான கலைப் பொருட்களை மில்லியன் கணக்கில் டாலர்களைக் கொட் டிக் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து, இந்தக் கிடங்குகளில் பதுக்கி வைக்கிறார்கள். இதை அங்கீகரிக்கும் சுவிஸ் நாட்டு அரசு, கிடங்குகளில் இருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமும் காக்கிறது.
இந்தக் கிடங்குகளில் உள்ள பழமையான கலைப் பொருட் களை அங்கு வைத்தே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பண்டம் மாற்றிக்கொள்ளவும் முடியும். இதேபோல் வேறு சில நாடுகளும் ‘ஃப்ரீ போர்ட்'களை வைத்துள்ளன. இந்தியப் பெரும் புள்ளிகள் சிலருக்கும் சுவிட்ஸர் லாந்தின் ஃப்ரீபோர்ட்டில் கிடங்கு கள் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.
லண்டனைச் சேர்ந்தவர் ராபர்ட் சைம்ஸ் என்ற கலைப் பொருள் டீலர். இவரது காதலி கிறிஸ்டோ மைக்க லைட்ஸ். கிரேக்கத்தைச் சேர்ந்த கப்பல் நிறுவன முதலாளி யின் மகள். சைம்ஸும் மைக்க லைட்ஸும் தொழில் பார்ட்னர்கள். 1970-ல் இருந்து சர்வதேச கலைப் பொருள் சந்தையின் கவர்ச்சி ஜோடியாக செயல்பட்டு வந்த இவர்கள் ‘ராபின் சைம்ஸ் லிமி டெட்’ என்ற கலைப் பொருள் நிறு வனத்தையும் லண்டனில் நடத்தி வந்தனர். இந்த நிலையில், 1999-ல் தனது 55 வயதில் எதிர்பாராத விதமாக மைக்கலைட்ஸ் இறந்து போனார்.
இதையடுத்து, மைக்கலைட் ஸின் உறவினர்கள், ராபின் சைம்ஸ் நிறுவனத்தில் மைக்கலைட்ஸுக் கான பங்கைக் கேட்டனர். அப்போது அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 125 மில்லியன் டாலர்கள். கேட்டதைத் தர மறுத்த சைம்ஸ், ‘மைக்கலைட்ஸ் தனது நிறுவனத்தின் பணியாளர் மட்டுமே’ என்று சொன்னார். இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்தபோது, தனக்கு லண்டன், நியூயார்க் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மட்டுமே கலைப் பொருள் கிடங்கு கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் சைம்ஸ். ஆனால், அவருக்கு 29 இடங்களில் கிடங்குகள் இருப்பதை துருவிக் கொண்டுவந்தது போலீஸ்.
இதையடுத்து, நீதிமன்ற அவ மதிப்பில் ஈடுபட்ட குற்றத்துக்காக 2005-ல் சைம்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம். அந்த நேரத்தில் சட்ட நடவடிக்கை களுக்காக செலுத்த வேண்டிய 5 மில்லியன் டாலரை செலுத் தத் தவறிய சைம்ஸ், தான் திவாலாகிவிட்டதாக நீதிமன்றத் தில் தெரிவித்து ஏழே மாதத்தில் விடுதலையும் ஆனார்.
இதற்கிடையில், மெடிசி வழக்கு கள் சிலவற்றில் சைம்ஸுக்கு உள்ள தொடர்புகளைக் கண்டுபிடித்த இத்தாலி போலீஸார், 2013-ல் சுவிஸ்ஸின் ஜெனீவா ஃப்ரீபோர்ட் டில் சைம்ஸுக்குச் சொந்தமான கிடங்கை நீதிமன்ற உத்தரவு பெற்று திறந்தனர். அதில் பண்டைய இத்தாலியின் ஈட்ரூஸ்கான் நாகரீகத்தைச் சேர்ந்த கல் சவப் பெட்டிகள் இரண்டு இருந்தன. இது இல்லாமல் அங்கே சைம்ஸ் பதுக்கி வைத்திருந்த கலைப் பொருட்கள் எவ்வளவு தெரியுமா? நாளை பார்ப்போம்.
- சிலைகள் பேசும்.. | ‘The India Pride Project’ உதவியுடன்
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 14: நடராஜர் சிலைகளை கடத்துவது ஏன்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT