Published : 15 Jul 2016 11:56 AM
Last Updated : 15 Jul 2016 11:56 AM
பற்பல ஆண்டுகளாக ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது விசாகப்பட்டிணம் கடற்கரை.
இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகள், அப்போது 'மாத்திரை பெட்டிகள்' (PillBoxes) என்று அழைக்கப்பட்டன. இந்த கான்க்ரீட் கோட்டைகள், கடற்கரையில் பாதுகாப்புக்கான வளையங்களாக உருவாக்கப்பட்டன. எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், கடற்கரையின் குறுக்கே இவை அமைக்கப்பட்டிருந்தன.
இவை சதுரப் பெட்டிகள் போல இப்போது அடுக்கடுக்காகக் காட்சியளிக்கின்றன. ஆனால் இந்த போர் சின்னங்கள் அனைத்தும் பல வருடங்களாக வெளியே தெரியாமல், கடற்கரையாலும் மணலாலும் மூடப்பட்டிருந்தன. விசாகப் பட்டிணக் கடற்கரையில் இருந்த கடைசி பதுங்கு குழி, 1959-ம் ஆண்டு வாக்கில் மறைந்து போனது.
ஆனால் இப்போது கடற்கரை அரிப்பாலும், புயல், சூறாவளிகளாலும் இவை பூமிக்கு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. 2014-ல் ஏற்பட்ட ஹுட் ஹுட் புயல், இந்த இடத்தையே அழித்துள்ளது. அப்போது பதுங்கு குழிகளில் ஒன்று, ஜாலரிபேட்டா என்ற நிலப் பகுதியை வந்தடைந்துள்ளது.
இந்த அமைப்புகள் யாவும், நிரந்தர நினைவுச் சின்னங்களாகவும், 1940-களின் கருப்பு நாட்களை அமைதியாக நினைவூட்டுபவை ஆகவும் இருக்கின்றன.
கட்டுரை தொடர்பான காணொளியைக் காண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT