Published : 15 Jun 2016 04:00 PM
Last Updated : 15 Jun 2016 04:00 PM
அரை லிட்டர் தண்ணீரை 40 ரூபாய்க்கு விற்கும் சென்னை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கட்டணமில்லாக் குடிநீரைப் பெறுவது குறித்த தகவலைப் பகிர்ந்திருக்கிறார் சினிமா ஆர்வலர் சிவக்குமார்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்,
”திரையரங்குகளில் கட்டணமில்லாத குடிநீரைக் கேட்டுப் பெறுதலை நம் உரிமையாகக் கருதியதால் திரையரங்க மேலாளர்களிடம் பேசி அந்த உரிமையைப் பெற்றிருக்கிறேன்.. அத்தோடு யார் வேண்டுமானாலும் கேட்டால் குடிநீர் இலவசமாகவே கிடைக்கும் என்ற விஷயத்தை என் ஃபேஸ்புக் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன்.
ஸ்கைவாக் பிவிஆர், சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டம்ளரோடு தூய்மையான குடிநீர் வைக்கப்பட்டிருக்கிறது. இதை திரையரங்க மேலாளர்களிடம் பேசி உறுதிப்படுத்திய பின்னரே பகிர்ந்திருக்கிறேன்.
திரையரங்கில் கட்டணமில்லா குடிநீர் இருக்கும் இடம் தெரியாவிட்டாலோ அல்லது தண்ணீர் இல்லாவிட்டாலோ ஊழியர் அல்லது அங்கிருக்கும் மேலாளரிடம் சொன்னால் பதில் / தீர்வு கிடைக்கும்” என்று கூறுகிறார்.
குடிநீர் பிரச்சனை தவிர்த்து திரைப்படங்கள் வெளியிடப்படும் நேரங்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்தும், வெளிமாநில பணியாளர்களால் திரையரங்குகளில் பேசும்போது ஏற்படும் நடைமுறை சிரமங்களைக் குறித்தும், திரையரங்க மேலாளர்களிடம் பேசியிருக்கிறார்.
அதுகுறித்த அவர்களின் பதில்களையும் பதிவு செய்திருக்கிறார் சிவக்குமார். மேலும் அவர் கூறிய குறைபாடுகளைக் களைய மேலாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பின்தொடர்ந்து பதிவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்த அவரின் ஃபேஸ்புக் விழிப்புணர்வு பதிவுகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT