Published : 11 Jan 2017 12:56 PM
Last Updated : 11 Jan 2017 12:56 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஜல்லிக்கட்டு- விளையாட்டா? அரசியலா?

விலங்குகளைத் துன்புறுத்தும் விளையாட்டு என்று ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்டு, ஆண்டுகள் உருண்டோடும் வேளையில், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மக்களிடையே வலுத்துக்கொண்டே வருகிறது. அவை குறித்த கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

அன்பு தளபதி ‏

பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டை எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம் என்ன?

MrKarachal ‏

விவாதம் என்றால் மல்லுக்கட்டு, வீரம் என்றால் ஜல்லிக்கட்டு.

I SUPPORT JALLIKATTU ‏

ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஓபிஎஸ் மட்டும் முடிச்சாருனா அதிமுக மீது புதிய நம்பிக்கை பிறக்கும்.

Padmanaban ‏

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. விலங்குகளை துன்புறுத்துவதாக கருதினால் விதிமுறைகள் விதிக்கட்டும். பதிலாக பாரம்பரியத்தை ஒழிப்பதா?

Raks

11 மாசம் சும்மா இருந்துட்டு ஜனவரி மாசம் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த போராடுவாங்க..

Mutharasan ‏

ஜல்லிக்கட்டு எங்களுக்கு பொழுது போக்கு அல்ல; அடையாளம். #TNneedsJALLIKATTU

பிரதாப் ‏

ஜல்லிக்கட்டு தமிழனோட வீர விளையாட்டுங்கிறது தான் பெரிய பிரச்சனையே.... மத்தபடி பீப்லாம் சாப்டுவாங்க.

kavikarthick ‏

காவிரி

ஜல்லிக்கட்டு

சேவல் சண்டை

மாட்டுக்கறி

#நடுவண் அரசின் அரசியல்!

sai kishoree ‏

மாடுகளை கறி மற்றும் அதன் தோலுக்காகப் பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு ஜல்லிக்கட்டு பற்றி என்ன தெரியும்?

Dr S RAMADOSS ‏

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசியல் லாபம் தேடக்கூடாது: பொன்னார்- முதலில் போட்டியை நடத்துங்கள். லாபமா, நஷ்டமா? என்பதை பின்னர் பார்ப்போம்!

தரணிதம்பி ‏@dharani102

மாட்டை வெட்டி விற்கலாம்; உண்ணலாம்; ஆனால் "ஜல்லிக்கட்டு" நடத்த கூடாது

ஆடு, இறைச்சி கடைகள் இருக்கலாம், ஆனால் கிடாசண்டை கூடாது.

இசைமொழி ‏@Isaiesam

#ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு களம் அல்ல, வீரம் நிறைந்த தமிழர்களின் தேர்வு களம்!!

Nithyanantham!! ‏

பசுவிற்கு வலிக்கிறது என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம்.. ஜல்லிக்கட்டு வழக்கில் அனல் பறந்த வாதம்..!!

praveentalks

ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டித்தனம் என்று ஒருவர் சொல்கிறார். நான் கொஞ்சம் விலகியே நின்றேன். அவர் வாயிலிருந்து மாட்டுக்கறி வாடை!

நாகரீகக் கோமாளி ‏

தல, தளபதி ரசிகர்களே கொஞ்சம் தன்மானத்திற்காகவும் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் குரல் கொடுங்கள்.

meetshiv27

அடையாளம் அழிந்தால் மெதுவாக அழிவாய். #SaveJallikattu

நட்பினியா.. ‏

ஜல்லிக்கட்டு விளையாட்டல்ல; நம் வாழ்வோடு ஒன்றிய பாரம்பரியம்.

Vijay Prabhakaran ‏

வீரத் தமிழ் மண்ணின் மைந்தர்கள் தமிழ் மரபைக் காக்கும் தருணம் இது..!!

>Ashok Selvan

பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது பீட்டா. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றவே அதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

நமது பாரம்பரியம், கலாச்சாரம் மேல் நமது அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அக்கறை இருக்க வேண்டாமா? மிருகத்தோலை பதனிட்டு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப் போகிறார்களா? காலணி, பர்ஸ், கைப்பை தடை செய்யப்படுமா?

நேற்று கிரிக்கெட் விளையாட்டில் மாணவர் மரணம். இனி கிரிக்கெட் தடை செய்யப்படுமா? குத்துச் சண்டையில் ஒரு மாணவி மரணம். குத்துச் சண்டை தடை செய்யப்படுமா? தினசரி விபத்துகள் பலர் மரணம். எதை நம்மால் தடுக்க முடியும்? ஜல்லிக்கட்டில்தான் ஆபத்தா? பின் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வது ஏன்?

Prabu Sankar ‏

நம் உரிமைக்கு நாமதான் முன்னாடி நின்னு போராடணும். தமிழனின் அடையாளம் என்றும் அழியாமல் பாதுகாப்போம்.

Samuel Churchill

போகிறபோக்கில் ஜல்லிக்கட்டு பிரச்சினையே சுதந்திரப் போராட்டம் போல செல்லும் போலிருக்கே?! #அரசியல்

Ajay Revanth ‏

ஒற்றுமை என்பது நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் ஓங்கி ஒலிக்க வேண்டும். #SaveJallikattu

Manikandan ‏@Mani2skyblue

தமிழ் திரையுலகம் ஜல்லிக்கட்டு காட்சியை படத்தில் வைக்கும் பொழுது அது வெறும் பொழுதுபோக்கிற்காக தான் என தற்போது புரிகிறது.

Abdul Rahman

ஜல்லிக்கட்டு மைண்ட் வாய்ஸ்: என்னை நோக்கி பாயும் பீட்டா..!

Ananth Kumar

பனை கள்ளு தடை - பனைமரம் விகிதம் குறைந்தது டாஸ்மாக் வந்தது.

சேவல் சண்டை தடை - நாட்டு கோழி விகிதம் குறைந்து பிராய்லர் வந்தது.

ஜல்லிக்கட்டு தடை - காளைகள் அழிந்து, கலப்பினம் பெருகி, பால் சந்தையை குறிவைத்து அன்னிய நாட்டு கம்பனிகள் முழுமையாக உள்ளே வரவா?

Shan karuppasamy

ஜல்லிக்கட்டு- சில சிந்தனைகள்

* ஆளுங்கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட கட்சியையோ அமைப்பையோ முக்கியத்துவம் தராமல் இயங்குவது என்று முடிவெடுத்திருக்க வேண்டும். கடினமான வேலை என்றாலும் இது முக்கியமான ஒன்று. தமிழக அரசும் எதிர்க்கட்சியும் இணைந்தால் இது சாத்தியம். மற்றவர்கள் தானாக இணைவார்கள் அல்லது புறக்கணிக்கப்படுவார்கள்.

* ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த சட்ட பூர்வமாக செய்யும் வேலைகளுக்கு கட்சிகள், சட்ட வல்லுனர்கள், விலங்கு ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு அதிகாரபூர்வ குழுவை அமைத்திருக்க வேண்டும்.

* வழக்கு நடத்தும் பீட்டா அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து விவாதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கலாம். இப்படி ஒன்றாக இணைந்து செயல்படுவதாக இருந்தால் நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்க வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x