Published : 02 Jul 2016 04:56 PM
Last Updated : 02 Jul 2016 04:56 PM
சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளார் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி, படுகொலை செய்யப்பட்டார். 27-ம் தேதி வழக்கு விசாரணை, ரயில்வே போலீஸிடம் இருந்து, தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தமிழக சிறப்பு தனிப்படையினர் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களில் விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு மற்றும் மாநில குற்றப் புலனாய்வுத்துறையின் சைபர் குற்றப் பிரிவினரும் பயன்படுத்தப்பட்டனர். சில நாட்களிலேயே கொலையாளி ராம்குமாரைத் தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் தமிழகக் காவல்துறைக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
திறன்பட செயல் பட்ட காவல்துறை. மற்ற வழக்குகளிலும் இதைப்போல் விரைவாக செயல்படவும்.
சுவாதி கொலைக்கான உண்மையான காரணத்தையும் காவல்துறை விசாரிச்சு அதையும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தணும்...!
சில்லறை தேடுபவர்களைத் தாண்டி நான்கு அறைகளுக்குள் உலவும் நல்லவர்களையும் உள்ளடக்கியதே நமது காவல்துறை.
தமிழ்நாடு போலீஸுக்குப் பாராட்டுக்கள்.
எதிர்க்கட்சிகளும், உயர் நீதிமன்றமும், பொதுமக்களும் தந்த நெருக்கடியை ஆக்கபூர்வமான இயக்கியாகக் கொண்டு சாதனை அவகாசத்தில் கொலைகாரனை மடக்கியிருக்கிறார்கள். பேசப்பட்ட இரண்டு வழக்குகளின் குற்றவாளிகளையும் பிடித்து விட்டார்கள். வாழ்த்துவோம்.
#சுவாதி கொலை வழக்கில் இத்தனை நாட்களாக காவல்துறை மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததா என்று நேற்று கேட்டவர்கள் எங்கே?
சுவாதியை கொலை செய்த கொலையாளி ராம்குமாரை கைது செய்ததன் மூலம் தன் திறமையை நிரூபித்திருக்கிறது தமிழக காவல்துறை.
க்ளூவே கிடைக்கல, கர்நாடகா, கத்தின்னு திசை திருப்பி அசால்டா திருநெல்வேலில பிடிச்ச காவல்துறை...
ரயில்வே போலீஸாரிடம் இருந்து தமிழக போலீஸாரிடம் வழக்கு கொடுக்கப்பட்ட சில தினங்களில் கொலையாளி கைது. தமிழ்நாடு காவல் துறை செம கெத்துதான்.
தனிப்படைகள் அமைத்து போலீஸ் தூக்கமில்லாம தேடிப் பிடிச்சிருக்கு.
சல்யூட் தமிழ்நாடு போலீஸ்.. விட்னஸ் இல்லாம இவ்ளோ சீக்கிரம் கண்டு புடிச்சிருக்காங்க!
தமிழ் படங்களில் மீசை வச்சிட்டு வர்ற போலி போலீஸ்ன்னு நெனச்சியா தமிழ்நாடு போலீஸ்டா, நெருப்புடா.
தமிழ்நாடு போலீஸ், லேட்டானாலும் உண்மையான குற்றவாளிய பிடிப்பாங்க.
8 நாட்கள், 10 சிறப்பு படை, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள், ஆயிரம் பேருக்கு மேல் விசாரணை. தமிழக காவல்துறை...!
சிறப்பு வாய்ந்த காவல்துறை என தமிழக காவல்துறை மீண்டும் நிருபித்துள்ளது. காவல் ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பாராட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT